districts

img

5 வருடம் பணிமுடித்த தகுதியுள்ள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குக!

புதுக்கோட்டை, ஆக.20 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தின் 6-ஆவது மாநில மாநாடு புதுக் கோட்டையில் ஆக.19, 20 தேதி களில் நடைபெற்றது. வெள்ளிக்கிழ மையன்று பேரணி-பொதுக்கூட்ட மும், சனிக்கிழமையன்று பிரதிநிதி கள் மாநாடும் நடைபெற்றது.  இம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டில் 15 விழுக்காடு அங்கன்வாடி மையங்களில் பணி யாளர், உதவியாளர் பணியிடங் கள் காலியாக உள்ளது. ஒரு பணி யாளர் இரண்டு மையங்களில் பணி செய்வது இரண்டு மையங்களை யும் பாதிக்கும். எனவே, காலிப் பணிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும். விலைவாசி கடுமை யான உயர்ந்துவரும் நிலையில் ஒரு குழந்தையின் உணவூட்டு செல வீனம் 5 ரூபாயாக உயர்த்தி வழங்க  வேண்டும். தமிழக அரசு அறிவித்து  ஒரு வருடத்திற்கு மேலாகியும் மத்திய அரசுக்கு இணையான ஊதி யத்தை வழங்கவில்லை. எனவே,  மத்திய அரசு வழங்கும் ஊதி யத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். 5 வருடம் பணிமுடித்த தகுதி யுள்ள உதவியாளர்களுக்கு பதவி  உயர்வு வழங்க வேண்டும். அங்கன் வாடி ஊழியர்களை திட்டப்பணி கள் தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத் தக்கூடாது. அங்கன்வாடி ஊழியர் களை எல்கேஜி, யுகேஜி வகுப்பு களுக்கு ஆசிரியர்களாக நியமித்து இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.  ஓய்வுபெறும்போது ஊழியருக்கு  ரூ.10 லட்சமும், உதவியாளர் களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொ டையாக வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டருக்கு உண்டான  மொத்த செலவுத் தொகையையும் அரசே வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட் டில் நிறைவேற்றப்பட்டன.

;