districts

img

சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டில் பெறப்பட்ட தியாகிகள் நினைவுச் சுடர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 24 ஆவது பிரதிநிதி கள் மாநாடு செவ்வாய்க்கிழமை கீரனூரில்  எழுச்சியுடன் தொடங்கியது. கடந்த மாவட்ட மாநாடு நடைபெற்ற  திருமயத்தில் இருந்து கொண்டு வரப் பட்ட மாநாட்டுக் கொடியை அரசியல்  தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

திரு வரங்குளம் ஒன்றியத்தில் இருந்து, முன்னாள் எம்எல்ஏ தோழர் எஸ்.ராஜ சேகரன் நினைவாக கொண்டு வரப் பட்ட கொடிமரத்தை மாநில செயற்குழு  உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொண்டர். திருமயம் ஒன்றியம் நைனாப்பட்டி யில் இருந்து தியாகி அடைக்கப்பன் நினைவாக கொண்டு வரப்பட்ட சுடரை  மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்ன துரை எம்எல்ஏ., அரிமளம் ஒன்றியம் நமுனை தியாகி சண்முகம் நினைவாக  கொண்டு வரப்பட்ட சுடரை அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் இருந்து தியாகி சிலுவை முத்து நினைவாகக் கொண்டு வரப் பட்ட சுடரை மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அறந்தாங்கியில் இருந்து தோழர் எம்.முத்துராமலிங்கம் நினைவாக கொண்டு  வரப்பட்ட சுடரை மாவட்ட செயற்குழு  உறுப்பினர் என்.கண்ணம்மாள், போக்கு வரத்துத் தொழிலாளர்கள் சார்பாக  தோழர் பி.ராமலிங்கம் நினைவாக கொண்டு வரப்பட்ட சுடரை மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ராமையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.