districts

img

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை அமல்படுத்துக! மாதர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக.8 - திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப் படி குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய்  ஆயிரம் வழங்கும் திட்டத்தை உடனடியாக  அமுல்படுத்த வேண்டுமென அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு பி.சுசீலா, ஆர்.கவிதா, எஸ்.சரிதா ஆகியோர் தலைமை வகித்தனர். லெட்சுமி கொடியேற்றினார். அஞ்சலி தீர்மானத்தை வி.இளவரசி வாசித் தார். வழக்கறிஞர் ஆர்.தீபா வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் டி. சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச் செல்வி ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி, முன்னாள் மாவட்டத் தலைவர் என்.கண்ணம்மாள் ஆகியோர் பேசினர்.  புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்று மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி நிறை வுரையாற்றினார். மாநாட்டில் தலைவராக எஸ்.பாண்டிச்செல்வி, துணைத் தலைவராக  டி.சலோமி, செயலாளராக பி.சுசீலா, துணைச்  செயலாளராக ஆர்.கவிதா, பொருளாளராக வைகைராணி உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப் படி குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு காலை 7 மணிக்கே வர வேண்டும் என நிர்ப்பந்திப்பதை தவிர்க்க வேண்டும். இத்திட்டத்தை அனைத்து பேரூ ராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கந்தர்வகோட்டையில் அனைத்து மகளிர்  காவல்நிலையம் கொண்டு வர வேண்டும்.  அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;