districts

img

புனல்குளம் அரசுப் பள்ளியில் ஆய்வகம், கணினி அறை, நூலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

புதுக்கோட்டை, செப்.16- புனல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம், கணினி அறை, கலை மற்றும் கைவினை, நூலகத் தினை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ. வீ.மெய்யநாதன் ஆகியோர் வெள்ளிக் கிழமை திறந்து வைத்தனர்.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஊராட்சி ஒன்றியம், புனல் குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத் தின் கீழ், ரூ.66.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, அறிவியல் ஆய்வகம்,  கணினி அறை, கலை மற்றும் கை வினை, நூலகத் திறப்பு விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை முன் னிலை வகித்தார். இவற்றை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.  முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சே.மணி வண்ணன், தலைமை ஆசிரியர் அ.தெரசா ரூபி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரெங்கராசு, உள் ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவ லர்கள் கலந்துகொண்டனர்.

;