districts

img

காமன்வெல்த் போட்டி பளுதூக்குதலில் தங்கம் வென்ற மகள்: தந்தை மாரடைப்பால் மரணம்

கந்தர்வகோட்டை, டிச.2-  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகில் உள்ள கல்லூகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வமுத்து-ரீட்டா தம்பதியர். இவர்களின் மகள் லோக பிரியா (22). இவர் 6-ஆம் வகுப்பு முதல் பளு தூக்குதல் போட்டியில் ஆர்வமுடன் கலந்து  கொண்டு, மாவட்டம், மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்று வந்தார். மேலும், இந்தியாவிற்கான பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகி நியூசிலாந்தில் நடை பெற்று வரும் காமன்வெல்த் பளு  தூக்குதலில் 52 கிலோ எடைப்பிரி வில், 350 கிலோ வரை பளுதூக்கி தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.  இந்நிலையில், செல்வமுத்து திருவாரூர் மாவட்டம், திருமா கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு புதனன்று சென்றுள்ளார், அங்கு செல்வ குமார் மாரடைப்பால் உயிரி ழந்தார். பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் பெற்ற நிலையில் தனது தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு லோகபிரியா கதறி அழுதார்.  இது பற்றி தெரிந்து கல்லூக்காரன்பட்டி யில் உள்ள லோக பிரியாவின் அம்மா ரீட்டா விடம் விசாரித்த போது, எங்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில், மூத்தவரான லோகபிரியா பட்டுக்கோட்டையில் முது நிலை கல்வி பயின்று வருகின்றார். இவர் சிறு வயதிலிருந்து பளு தூக்குதலில் ஆர்வமாக  இருந்ததால், அதில் முழு கவனம் செலுத்தி  வந்தார். தற்போது காமன்வெல்த் போட்டி யில் தங்க பதக்கம் பெற்றுள்ளதாக வும், தங்கப்பதக்கம் பெற்றதை தனது தந்தைக்கு தெரிவிக்க முடியாமலும்,  தனது தந்தையின் முகத்தை கடைசி  வரை பார்க்க முடியாமலும் லோக பிரியா துயர் அடைந்துள்ளதாக தெரி வித்தார்.  2 ஆவது மகள் பிரியதர்ஷினி (19), இளநிலை கல்வி பயின்று வரு கிறார். 3 ஆவது மகள்பிரியங்கா (14)  9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்ப  சூழ்நிலையில் இருந்து வருவதால் குடி யிருக்க வீடு இன்றி கூரை வீட்டில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு போதுமான உதவி களை அரசாங்கம் செய்து தர வேண்டும்,  ஆதரவற்ற எங்களுக்கு அரசு வேலை வழங்கி உதவிட கோரி ரீட்டா கண்ணீர் மல்க  கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு  இவர்களின் கண்ணீரை துடைக்க நடவடிக்கை  எடுக்குமா?

;