districts

img

மயானத்திற்கு சாலை கேட்டு தாஞ்சூர் பட்டியல் வகுப்பு மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

புதுக்கோட்டை, செப்.19 - தாஞ்சூர் பட்டியல் வகுப்பு மக்களுக்கான  மயானத்திற்கு சாலை வசதி கேட்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே தாஞ்சூர் கிராமத்தில் சுமார் 200 பட்டியல் வகுப்பு குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இவர்களுக்கு மயான சாலை இல்லா ததால் பல தலைமுறைகளாக வயல் வெளியை கடந்து, சடலங்களை கொண்டு சென்று அடக்கம் செய்து வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மக்களுக்கு மயான சாலை அமைத்து தர சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள் கிழமை மேற்படி தாஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த  பட்டியல் வகுப்பு மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  அப்போது அவர்கள் கூறுகையில், “கடந்த ஆண்டு மேற்படி பட்டியல் வகுப்பு மக்களுக்கு மயான சாலை அமைத்து தர  வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர்,  மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை சாலை அமைக்கவில்லை. வீட்டில் ஒருவர் இறந்து விட்டால் சடலத்தை முட்புதர்கள் நிறைந்த காடுகளை கடந்தும், தண்ணீர் நிறைந்த வயல்வெளிகளை தாண்டியும் மயானத்திற்கு செல்ல வேண்டிய அவலம் தொடர்கிறது. இந்த பிரச்சனை இருப்பதால் மற்ற கிராமத்தினர் எங்கள் கிராமத்திற்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர்” என கண்  கலங்கினர்.  மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவ டிக்கை எடுத்து, தங்களுக்கு மயான சாலை  அமைத்து தர வேண்டும் என அவர்கள் வேத னையோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.

;