districts

img

விலை உயர்ந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர் கைது

நீலகிரி, ஜூலை 30- குன்னூர் அருகே தோட்டத்தில் வளர்ந்த சந்தன மரங் களை வெட்டி கடத்திய ஒருவரை காவல் துறையினர் கைது  செய்து, மேலும், இருவரை தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நான்சச்  செட்டியார் தோட்டத்தில் இயற்கையாக வளர்ந்த 50க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளன. கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று பெய்த மழையை பயன்படுத்தி 5 சந்தன மரங்களை அடையாளம் தெரி யாத நபர்கள்  வெட்டி சென்றனர்.  இதேப்பகுதியில் கடந்த தீபாவளியின் போதும் சந்தன  மரம் வெட்டி கடத்தப்பட்டது இப் பகுதியில் வனதுறைக்கு சொந்தமான இடத்திலும் பட்டா நிலத்திலும் அதிக சந்தன மரங்கள் உள்ளதால் இப்பகுதி பாதுக்காக்கப்பட்ட. பகுதியாக வனத்துறை  அறிவித்தது. ஆனாலும், சந்தன மரக்கடத்தல் குறையவில்லை. மேலும், சந் தனமரம் வெட்டி கடத்தப்பட்ட பகுதியில் குன்னூர் வனத்துறை யினர் கொலக்கொம்பை காவல் துறையினரிடம் புகார் அளித் திருந்தனர். அதன்பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குற்றவாளிகளை குன்னூர் வனசரகர் சசிக் குமார் தலைமையில் ராஜ்குமார், சபரி, காடுவாச்சர், நாகராஜ் மற்றும் பல வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில், குன்னூர் ஜோகி கோம்பை பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி (36) என்பவரை வனத்துறை பிடித்து விசா ரனை மேற்கொண்டதில் சந்தன மரங்கள் வெட்டி பதுக்கப் பட்ட இடத்தை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து பிடிபட்ட பொன்னுசாமியை குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த நடராஜ், நாக ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

;