districts

img

இயல்பாய் இருப்பதால்தான் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்!

நாமக்கல், ஜூலை 25 - இயல்பாய், எளிமையாய் இருப்பதினால்தான் நாங்கள் கம்யூ னிஸ்ட்களாக இருக்கிறோம் என  தோழர்.மோளிப்பள்ளி வி.ராமசாமி யின் நூற்றாண்டு விழா நிகழ்வில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் பெருமிதத்தோடு தெரிவித் தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், திருச்செங் கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான தோழர்வி.ராமசாமி யின் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் மலர் வெளியீடு திருச்செங்கோடு கொங்கு மண்டபத்தில் செவ்வாயன்று நடை பெற்றது.

இந்த நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட குழு செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமை ஏற்றார். ஆண்டிபாளை யம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஆதி நாராயணன் வரவேற்று பேசினார். 

இந்த நிகழ்வில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம்  நூற்றாண்டு  விழா மலரை வெளியிட, அதை கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, இந்நிகழ் வில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்  பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என்.பாண்டி, டி.ரவீந்திரன், செ.முத்துக் கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.

இந்நிகழ்வில் பெ.சண்முகம் பேசு கையில், இந்த நிகழ்வின் நாயகனான தோழர் “வி.ஆர்.” என அன்போடு அழைக்கப்பட்ட வி.ராம சாமி, இந்த சங்கத்துக்குத்தான் வேலை செய்தார் என்று சொல்ல முடியாது. எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கே அவர் இருப்பார். உழைப் பாளி மக்களுடைய எல்லா போராட்டங்களிலும் பங்கேற்ற தலை வராகத்தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார். 

இன்றைக்கு தலைவராக இருக்கக் கூடிய கட்சியினுடைய தூண்களாக விளங்கக்கூடிய பல தலைவர்களை உருவாக்கிய தலைவர் தோழர்  “வி.ஆர்.”. 

அவருடைய பொது வாழ்க்கை என்பது ஏழாவது வயதிலே துவங்கு கிறது. அவர் 75 ஆண்டுகள் இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கிறார். ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையிலே தன்னை முழு மையாக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் “வி.ஆர்.”.

மலைவாழ் மக்களின் பாதுகாவலர்

இங்கே கம்யூனிஸ்ட்களின் எளி மையை பற்றி பலரும் பேசினார்கள். கம்யூனிஸ்ட்களிடம்  இருக்க வேண்டிய  ஒரு இயல்பான குணம் எளிமை,  நேர்மை, மக்களுக்காக நம்மை அர்ப்ப ணித்துக் கொள்வது. இவையெல்லாம் கம்யூனிஸ்ட்களுக்கு இருக்க வேண்டிய  ஒரு அடிப்படையான இயல்பான குணம். அது ஏதோ ஸ்பெஷல் அல்ல.

அப்படி இருப்பவர்கள் தான் கம்யூ னிஸ்டுகள். அப்படி இருப்பதினால் தான் நாங்கள் கம்யூனிஸ்ட்களாக இருக் கிறோம். அப்படி இருப்பதினால்தான் மக்களால் நேசிக்கப்படுகிறோம் என்ப தை நாம் மறந்துவிடக்கூடாது. இது அல்லாத குணங்கள் தான் கம்யூனிச நெறிமுறைகளுக்கு விரோதமான குணங்கள். 

நான் கிட்டத்தட்ட பத்தாண்டு  காலம் “வி.ஆர்.”உடன் சேர்ந்து பணி யாற்றுகிற வாய்ப்பு கிடைத்தது. குறிப் பாக 1992 ஆம் ஆண்டு வாச்சாத்தி வன்கொடுமை நடைபெற்ற போது அந்த செய்தி கிடைத்தவுடன் வெளி யில் இருந்து வந்த முதல் தலைவர்  அருமை தோழர் “வி.ஆர்.”. மாதக்கணக் கில் அரூர் பகுதியிலேயே தங்கியிருந்து வாச்சாத்தி போராட்டத்தை வெற்றிகர மாக்குவதிலும், அடுத்தடுத்த கட்டங் களை கொண்டு செல்வதிலும் மிக  முக்கிய பங்காற்றியவர் தோழர் “வி.ஆர்.” அதற்கு பிறகும் ஒன்று பட்ட சேலம் மாவட்டத்தில் அல்லது நாமக்கல் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் மத்தியில் அனேகமாக இருக்கிற  எல்லா மலைக்கும் என்னோடு வந்திருக் கிறார். அல்லது அவரோடு நான் போய்  இருப்பேன்.

இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஆதிவாசி மக்கள் மத்தியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஒரு முதன்மையான அமைப்பாகவும் அனைத்து பழங்குடி மக்களுக்கான அமைப்பாகவும் இன்றைக்கு  வளர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அதிலே  அருமை  தோழர் “வி.ஆர்.” பங்கு இருக்கிறது.

ஒன்றரை அடி திருக்குறள் கூட இந்தாண்டு இல்லை

இன்றைக்கு மத்தியில் ஆளக் கூடிய மோடி அரசாங்கம்,  கடந்த காலத்தைப் போல  தனித்து ஆட்சி  அமைக்கவில்லை. கூட்டணி ஆட்சி யில் மீண்டும் பிரதமராக வந்திருக்கிற  நிலைமையில் நாடு உள்ளது. பட்ஜெட்டை பத்தி  எல்லாரும் பேசுகிறார்கள். வழக்கமாக திருக்குறளாவது சொல்வார்கள், ஆனால், இந்த பட்ஜெட்டில் அதுவும் கூறவில்லை. ஒன்றரை அடி திருக்குறள் கூட  தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்பதை எல்லாம்  இங்கு வருத்தத்தோடு சொன்னார்கள்.  தமிழ்நாட்டை பழி வாங்குகிறார்கள், தமிழ்நாடு முழுக்க முழுக்க பாஜகவை மண்ணைக்கவ்வச் செய்திருக்கிறது என்பதற்கு பழிவாங்கக் கூடிய வகையில் தான் இன்றைக்கு பட்ஜெட்டிலே  தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது.

பாஜகவிற்கு எதிராக வாக்களித்த மாநில மக்களையெல்லாம் பழிவாங்கக் கூடிய வகையிலே தான் இன்றைக்கு ஒன்றிய அரசு தன்னுடைய நிதி நிலை  அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரி யது. இத்தகைய ஆட்சி என்பது தொடர் வது எந்த விதத்திலும் இந்த நாட்டுக்கு  நல்லதல்ல.

கிராமப்புற மக்களுக்கு துரோகம்

கிராமப்புற மக்களுக்கான ஒரே  வழி வேலை வாய்ப்பாக இருக்கக் கூடிய நூறு நாள் வேலை திட்டத்திற்கு  வேட்டு வைக்கும் வகையில் ஆட்சியா ளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் தான் கிராம மக்களை காப்பாற் றிக் கொண்டிருக்கிறது. அந்த திட்டத் திற்கு இந்த பட்ஜெட்டிலே வெறும் ரூ.86,000 கோடி தான் ஒதுக்கி இருக்கி றார்கள். இந்த 86 ஆயிரம் கோடியில் ஏறத்தாழ 45 ஆயிரம் கோடி  ரூபாய் ஏற்கெனவே கூலி பாக்கி இருக்கிறது. இந்திய நாடு முழுவதும் மீதி இருப்பது எவ்வளவு வெறும் 42  ஆயிரம் கோடி ரூபாய்தான் உள்ளது.  ஓராண்டு காலத்திற்கு கிராமப்புற வேலை செய்த திட்டத்திற்காக இந்த  தொகையே இந்த அரசாங்கம் ஒதுக்கி  இருக்கிற தொகையாகும். இதன் மூல மாக கிராமப்புற வேலையின்மையை மேலும் அதிகப்படுத்துவதும், கிராமப் புற வறுமையை மேலும் அதிகப்படுத்தத் தான் இந்த அரசாங்கம் செயல் பட்டு இருக்கிறது. கிராமப்புற மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அவர்களுக்கான வேலை வாய்ப்பு  அதிகப்படுத்துவதற்கான எந்த முயற்சி யிலும் இவர்கள் ஈடுபடவில்லை.

பழிவாங்கும் பட்ஜெட்

கடுமையான வேலையின்மை, விலைவாசி கடுமையாக உயர்ந்துள் ளது. மாநிலங்கள் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன. இதற் கெல்லாம் தீர்வு சொல்லக்கூடிய வகையில் இந்த நிதிநிலைஅறிக்கை என்பது இல்லாமல் பாரபட்சமாகவும் பழிவாங்கக் கூடிய வகையிலும் உள்ளது.  ஆகவே இந்த பட்ஜெட்டுக்கு எதிராக  நாடு முழுவதும் மக்களை தட்டி எழுப்ப  வேண்டும். 

இதேபோன்று, இந்திய நாட்டு மக்க ளுக்கு சில அடிப்படையான உரிமை களை வழங்கியிருக்கிறது. இந்திய அர சியல் சாசனம். அதுதான் கருத்துரிமை,  பேச்சுரிமை, எழுத்துரிமை, சுதந்திரம்,  ஜனநாயகம் போன்ற பல்வேறு அடிப் படையான உரிமைகளை வழங்கியி ருக்கிறது. இதற்கு நேர் மாறாக குற்ற வியல் சட்டங்களில் பல்வேறு புதிய  சரத்துக்களை சேர்த்து இந்த அடிப்படை  உரிமைகளை எல்லாம் பறிக்கக்கூடிய  காரியத்தில் பாஜக ஈடுபட்டு வரு கிறது. ஆகவே அதற்கு எதிராக இந்த  மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வற் புறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எப்படி வாழ்நாள் முழுவதும் செங் கொடி இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத் தோடு தான் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அருமை தோழர் வி.ஆர். அவருடைய கனவு  நினைவாக வேண்டும் என்றால், நம்மு டைய வர்க்கங்களை நம்முடைய கட்சி யின் தலைமையின் கீழ் திரட்டுவதற்கு முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.     (ந.நி)