districts

img

அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை

நாகப்பட்டினம், நவ.30- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டப் பேரவை வேதா ரண்யத்தில் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.ராணி தலை மை வகித்தார். வேதாரண் யம் வட்டச் செயலாளர் வி.எஸ்.இராமமூர்த்தி வர வேற்றார். மாநிலத் தலை வர் மு.அன்பரசு துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் அ.தி.அன்பழகன், மாவட்டப் பொருளாளர் ப. அந்துவன் சேரல் ஆகியோர் பேசினர்.  நாகை தொழிற்சங்க கூட்  டமைப்பு தலைவர் சு.சிவ குமார் வாழ்த்திப் பேசினார். மாநிலச் செயலாளர் சா. டானியல் ஜெயசிங் நிறை வுரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார்.  வேதாரண்யம் பகுதியில் மலர், பழங்கள் மற்றும் உப்பு சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், நாகப் பட்டினம் நகரின் மத்தியில் இயங்கிவரும் தற்போதைய மருத்துவக்கல்லூரி மருத்து வமனையை பெண்கள் மற்  றும் குழந்தைகள் நல மருத்து வமனையாக தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

;