districts

img

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா மார்ச் 3-இல் தொடக்கம்

தேனி, பிப்.27- தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் புத்தகத் திருவிழா மார்ச் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திடலில் நடக்கிறது. இந்தப் புத்தகத் திரு விழாவுக்காக வடிவமைக்கப்பட்ட ‘இலட் சினை’ அறிமுக நிகழ்வு ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று நடைபெற்றது. ‘இலட்சினையை மாவட்ட ஆட்சி யர் ஷஜீவனா வெளியிட, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ்  டோங்கரே பெற்றுக் கொண்டார்.  இலட் சினை தேனி மாவட்ட சிறப்புகளில் ஒன்றான கோம்பை நாயின் உருவப்படத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து  ஆட்சியர் ஷஜீவனா செய்தியாளர்களிடம்  கூறியதாவது:- முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனியில் புத்தகத் திருவிழா நடக்கி றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி தொடங்கி வைக்கிறார். புத்த கத்துக்காக 40 அரங்குகளும், அரசுத் துறை களின் திட்டங்கள் குறித்து 10 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தகத் திருவிழாவில் தினமும் பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாநில, மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் சாதனை படைத்தவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி  முதல் மாலை 5 மணி வரை சுமார் 1,000  மாணவ, மாணவிகள் பங்கேற்கவும், மாணவ, மாணவிகளை அழைத்து வருவ தற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர்  தினத்தையொட்டி மகளிரை பெருமைப்  படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள், மண்ணின் மைந்தர்களான எழுத்தா ளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள் நடை பெறும். பாரம்பரிய நாய்கள் கண்காட்சி யும் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழா நடக்கும் இடத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 500-க்கும் மேல் புத்தகங்கள் வாக்குப வர்கள் குலுக்கல் முறையில் தினமும் மூன்று பேரை தேர்வு செய்து பரிசு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். புத்தகத் திருவிழாவை  வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்க வேண்  டும் என்றார். பேட்டியின்போது மாவட்ட வன அலு வலர் சமர்த்தா, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்த னர்.

;