districts

img

தேனி பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு

தேனி, பிப்.15- தேனி மாவட்டம் பாளையம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 657 காளைகளும் ,400 வீரர்களும் களம் இறங்கி னர். முதல் பரிசாக மதுரையை சேர்ந்த மாடு பிடி வீரர் கார்த்திக் ராஜா என்பவர் காரை  பரிசாக தட்டி சென்றார். பாளையம் அருகே  பல்லவராயன்பட்டி யில் ஏழைகாத்தம்மன், வல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.தேனி  மாவட்ட ஆட்சியர் ஆர்வி.ஷஜீவனா தலை மை வகித்தார். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரவின்உமேஷ் டோங்கரே, கம்பம், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பி னர்கள் என்.ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை, அய்யம்பட்டி, சீலை யம்பட்டி, உத்தமபாளையம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களைச் சேர்ந்த காளைகளும், வீரர்களும் கலந்து கொண்டனர். சுழற்சி முறையில் 1 மணி நேரத்திற்கு 50வீரர்கள் வீதம் 400வீரர்கள் களம் இறங்கி னர். 657காளைகள் களம் இறங்கின. இதில் அதிகமாக 28 காளைகளை அடக்  கிய மதுரையைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்  கப்பட்டது. 12 காளைகளை அடக்கி இரண்  டாம்இடம் பிடித்த மதுரை குருவித்துறை யைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இரு  சக்கர வாகனம் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக மதுரை சூலமங்க லத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மாடு தேர்வு செய்யப்பட்டு உரிமையாளருக்கு இருசக்கரவாகனம் பரிசாக வழங்கப் பட்டது.   ஜல்லிக்கட்டு நடைபெற்ற போது ராயப்பன்பட்டியைச் சேர்ந்த திலீப் என்ப வரது மாடு ஆவேசமாக வாடிவாசலில் ஓடிவந்த போது அதில் இருந்த தடுப்பில் மோதி உயிரிழந்தது. இதேபோல் மதுரை புதூரைச் சேர்ந்த  ஆனந்தகுமார் என்பவரது மாடு ஓடுபாதை யில் வெளியேறி ஓடியபோது கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.    காயம்அடைந்த 10 பேருக்கு அதே இடத்தில் சிகிச்சை அளிக்  கப்பட்டது. படுகாயம் அடைந்த ஒருவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.