districts

img

கோவையில் உலக சிலம்பம் போட்டி

தேனி, ஜூன் 7 -   கோவையில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டியில் தங்கம்,வெள்ளி,வெண்கலம் பதக்கங்களை வென்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு ஆண்டிபட்டி அருகே கண்ணியப்பபிள்ளை பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது .

கோவை எஸ்,என்,எஸ். கல்லூரியில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் இந்தியா,மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கண்ணியப்பபிள்ளைபட்டியில் பயிற்சி பெற்ற மாணவர்கள்    ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், சுருள்வாள் போட்டிகளில் 4 பேர் தங்கப்பதக்கம், 10 பேர் வெள்ளிப் பதக்கமும், 6 பேர் வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.

பாராட்டு நிகழ்ச்சிக்கு  தொழிலதிபர் முருகன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்தும், பயிற்றுநர்களுக்கு  பாராட்டு தெரிவித்தார். தேனி மாவட்ட அமெச்சூர் கிக் அசோசியேசன் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் ஆனந்த வேல்முருகன் வரவேற்று பேசினார்.துணைப்  பயிற்சியாளர்கள் வரதராஜன், ஜெயவேல் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.