districts

பத்ம விருது பெற  விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூன் 25 -  தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறை களில் தலைசிறந்தவர்களாகவும், தனிநபராக சாதனை புரிந்தவர்களாகவும் இருப்பவர்களுக்கு பத்ம விருது வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், இசை, பெயிண்டிங், சிற்பத்திறன், போட்டோ கிராஃபர், சினிமா  ஆகிய துறைகளில் தேசிய அளவில் தன் திறமைகளை நிரு பித்தவர்கள், பொது நலத் தொண்டு, தன்னார்வ தொண்டு  சாதி சமய தொண்டாற்றியவர்கள், பொதுமக்கள் சேவை,  சட்டம், பொது வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் சேவை  புரிந்தவர்கள், அறிவியல், பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி, நியூக்ளியர் அறிவியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்கள். நாட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலை, வங்கி, பொரு ளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் சாதனை படைத்த வர்கள், மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதா, ஹோமியோ பதி, சித்தா, அலோபதி, இயற்கை வைத்தியம் ஆகிய வற்றில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய கண்டு பிடிப்பை நிகழ்த்தியவர்கள், கல்வி, பத்திரிகை, கல்வி கற்பித்தல், நாவல், கவிதை, பாடல், கல்விக்கான முன்னேற்ற சேவை ஆகியவற்றில் சாதனை படைத்தவர் கள், அரசாங்கத்தில் மேனேஜ்மென்ட், நிர்வாகம் மற்றும்  அரசாங்கம் மேம்பாடு அடையச் செய்தவர்கள், விளை யாட்டுத் துறையில் தேசிய, பன்னாட்டு அளவில் பதக்கம்  பெற்றவர்கள்.

மலையேற்றம், விளையாட்டுத் துறையை மேம்படுத்தி யவர்கள், விளையாட்டினை ஊக்கப்படுத்தியவர்கள், பன்னாட்டு அளவில் போட்டிகளை சிறப்பாக நடத்திய வர்கள், பன்னாட்டு அளவில் யோகாவில் பதக்கம் பெற்றவர் கள், இந்திய கலாச்சாரம், மனித உரிமை நிலை நாட்டல், வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும்  காப்பாற்றுதல் போன்ற சாதனைகளை நிகழ்த்திய வர்களுக்கு பத்ம விருதுகள் (அதாவது பத்மஸ்ரீ, பத்ம  விபூசன், பத்மபூசன்) இந்திய அரசால் வழங்கப்பட வுள்ளது.  எனவே, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறை களில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்த வர்கள் இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும்  இதர விபரங்களை  https://padmaawards.gov.in என்ற  இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை https://padmaawards.gov.in என்ற இணையதள முக வரியிலேயே 15.9.2022-க்குள் பதிவேற்றம் செய்யலாம். மேற்படி விருது பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்தி லுள்ள சாதனை புரிந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெற  வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

;