districts

அங்கன்வாடியில் தீண்டாமைக் கொடுமை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மன்னார்குடி, டிச.12- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வருவாய் வட்டம் பழையனூர் கிரா மத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் நாடியம்மாள் என்பவர் அங்கன்  வாடிக்கு வரும் பழங்குடியின, பட்டியல் வகுப்பு குழந்தைகள், ஊட்டச்சத்து மாவு பெற வரும் கர்ப்பிணி பெண்களிடம் சாதிய  வன்மத்தோடு நடந்து கொள்வதாக புகார் எழுந்ததுள்ளது. மாவட்ட நிர்வாகம் தாம தமின்றி உடனே நடவடிக்கை எடுக்க வேண்  டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழு கேட்டுக் கொண்டுள்ளது.  இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலாளர் கே.தமிழ் மணி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பழைய னூர் கிராமத்தில் இயங்கி வரும் அங்கன் வாடி மைய ஊழியர் நாடியம்மாள் தொடர்ந்து சாதிய வன்மத்தோடு தீண் டாமை கொடுமைகளில் ஈடுபட்டு வரு கிறார். பழையனூர் கிராம மக்கள் எங்களி டம் அளித்த புகார் மனுவை பெற்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அக்டோபர் 22 அன்று புகார் மனு அளிக் கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக நவம்பர் 7 அன்று  குழந்தைகள் வளர்ச்சி ஊட்டச்சத்து துறை  இயக்குநரிடமும் புகார் மனு கொடுக்கப்பட் டது. ஆனால், இதுகுறித்து எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பழையனூர் கிராம அங்கன்வாடி ஊழியர்  நாடியம்மாள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

;