districts

img

மேலராமன்சேத்தி அரசுப் பள்ளிக்கு புதிய கட்டிடம் எப்போது கட்டப்படும்?

குடவாசல், ஆக.19 -  இடிந்து விழும் நிலையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டி டத்தை இடித்து விட்டு புதிய கட்டி டம் கட்ட வேண்டும் என கோ ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவா சல் ஒன்றியத்தில் உள்ள சீதக்க மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த  மேலராமன்சேத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரு கின்றனர். இந்த பள்ளி வகுப் பறை கட்டிடம் கடந்த ஆறு வரு டங்களுக்கு முன்பு சீர் செய்யப்பட்டது. தற் போது மிகவும் மோசமான நிலையில் எப் போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தினமும் அச்சத்துடன் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும் நிலை உள்ளது. எனவே இடிந்து விழும் நிலை யில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட சம்பந் தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கோபிநாத் கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிலைதான் உள்ளது. இடிந்த நிலையில் உள்ள கட்டி டத்தை இடிக்க உத்தரவு வந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை  புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. மாணவர்களின் பாதுகாப்பை கருதி புதிய கட்டிடம் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

;