districts

img

பேரளம் பேரூராட்சியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்

நன்னிலம், பிப்.5 -  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேர ளம் பேரூராட்சி வார்டு 12  இல் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பாக 12 உறுப்பினர்கள் போட்டி யிடுகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வார்டு 2 இல் கட்சி யின் வேட்பாளர்கள் எம்.சித்ரா மனோகரன் மற்றும் வார்டு 12 இல் பி.ராஜா ஆகியோர் புதன்கிழமை நன்னிலம் பேரூராட்சி அலு வலகத்தில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி முன்னிலையில் நன்னிலம் ஒன்றியச் செய லாளர் கே.எம்.லிங்கம், திமுக ஒன்றிய செயலாளர் வரத.கோ.ஆனந்த் ஆகி யோர் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.  மனுத் தாக்கல் செய்த போது சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீர பாண்டியன், சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ. முகமது உதுமான், வாலிபர்  சங்க மாவட்டத் தலை வர் எஸ்.எம். சலாவுதீன் மற்றும் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் ஒன்றிய, நகர பொறுப்பா ளர்கள் உடனிருந்தனர்.

;