districts

img

வாலிபர் ரமேஷ் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 14 -  திருவாரூர் மாவட்டம் அலிவலம் பகுதியை சேர்ந்த வர் கனகவள்ளி. இவரது கண வர் மயிலாடுதுறை மாவட்டம்  கஞ்சாநகரம் ஊராட்சியை சேர்ந்த ரமேஷ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி நன்னிலம் வட்டம் ஆண்டிபந்தல் அருகே சடல மாக மீட்கப்பட்டார். இந்த மர்ம மரணம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து உரிய விசா ரணை நடத்தாமல் நன்னிலம்  காவல் துறை ஆய்வாளர் சுகுணா மற்றும்  காவல்துறை துணை ஆய்வாளர் நாக ராஜன் ஆகியோர் அவசர  அவசரமாக இறந்து போன  ரமேஷின் உடலை உறவி னர்கள் பெற்று அடக்கம் செய்ய வைத்துள்ளனர். இந்த  சம்பவத்திற்கு காரணமான பாக்கம் கோட்டூரைச் சேர்ந்த என்.முகமது முஸ்தபா, எம்.முகமது மாலிக் ஆகியோர் காவல்துறையின் உதவி யோடு வெளிநாடு தப்பிச் சென்று விட்டனர். இதனால் கணவனை இழந்த ஆர்.கனகவள்ளி தனது குழந்தைகளோடு, கடந்த 8 மாதமாக தவித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக நன்னி லம் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவாரூர் மாவட்ட செய லாளர் பி.கோமதி தலைமை யில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர்,  மயிலாடுதுறை, நாகப்பட்டி னம் மாவட்டங்களைச் சேர்ந்த மாதர் சங்க நிர்வாகி கள் டி.லதா, ஜி.வெண்ணிலா, மாநில துணை தலைவர் ஜி.கலைச்செல்வி ஆகி யோர் கலந்து கொண்டனர். அப்போது, வாலிபர் ரமேஷ் மர்ம மரணம் தொ டர்பாக அவசர அவசரமாக விசாரணையை முடித்து, உறவினர்களிடம் உடலை பெற்றுக் கொள்ள நிர்ப்பந் தப்படுத்திய நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணா தேவி, மற்றும் துணை ஆய்வாளர் நாகராஜன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.50 ஆயி ரம், பயன்படுத்திய செல் போன் ஆகியவை குறித்தும்  வழக்கில் சேர்க்க வேண்டும். இவ்வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும்.  கணவனை இழந்து கைக் குழந்தைகளோடு தவிக்கும் கனகவள்ளிக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்க வேண்டும். ரமேஷ் மரணத்தில் தொடர்புடைய முகமது முஸ்தபா, முகமது மாலிக் இருவரையும் வெளி நாட்டிலிருந்து வரவழைக்க வேண்டும். இவர்களை வெளிநாடு அனுப்பிய பஜ்ருல்  ஹக்கை விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வர  வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன.  சம்பவ இடத்துக்கு நேரில்  வந்த நன்னிலம் டி.எஸ்.பி  அ.இளங்கோவன் போராக் டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விசாரணையில் ஏற்பட்ட தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது விரைந்து வழக்கு  குறித்து மறுவிசாரணை செய்யவும், ஆதாரங்கள் இருப்பின் விபத்து மரணம் என பதிந்த வழக்கை, மர்ம மரணம் என பதிவதாகவும் பிற கோரிக்கைகள் குறித்து  பரிசீலிப்பதாகவும் உறுதி யளித்தார். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.  பேச்சுவார்த்தையின் போது, சிபிஎம் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், நிர்வா கிகள் மற்றும் மாதர் சங்கத்தி னர் பங்கேற்றனர்.

;