திருவாரூர்,டிச.4- திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் ஒன்றியம்,வேடம்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேடம்பூர் முன்னாள் கிளைச் செயலாளர் எம்.ராஜேந்திரன் (62) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவரது மறைவு செய்தி அறிந்து, கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் என். இராதா, ஒன்றிய செயலாளர் டி. சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் எஸ்.ராமலிங்கம், சி.வாசு, வேடம்பூர் மூத்த வி.பேச்சிமுத்து மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகி கள், கட்சித் தோழர்கள் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை நடை பெற்றது.