districts

img

இடிந்து விழும் நிலையில் பள்ளி மாணவர் விடுதி நிதி ஒதுக்கியும் கட்டுமானப் பணிகளை துவங்கவில்லை

திருவாரூர், ஜூலை 12 -  திருவாரூர் மாவட்டத்தில் நெடுங் குளம் (நன்னிலம்), சவளைக்காரன் (மன்னார்குடி), அபிஷேக கட்டளை (திருத்துறைப்பூண்டி) ஆகிய மூன்று  இடங்களில் மட்டுமே ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் செயல்பட்டு வரு கின்றன. நன்னிலம் ஒன்றியம் நெடுங்குளத் தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக பள்ளிக்கு அருகிலேயே அரசு மாண வியர் விடுதியும் இயங்கி வருகிறது. ஆனால் இவ்விடுதியின் சுவர்களில் விரிசல் விழுந்து, தரை உள்வாங்கி மிகவும் சேதமடைந்துள்ளது.  இதனால் எந்த நேரத்தில் விடுதி இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் முறையிட்டதின் பேரில், இவ் விடுதியை சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் நேரில் வந்து பார்வை யிட்டனர். மேலும், இக்கட்டிடத்தை முற்றிலுமாக இடித்து தரை மட்ட மாக்கிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டித் தரவும், அதுவரை பள்ளியி லேயே ஒரு பகுதியில் விடுதி இயங்க  ஏற்பாடுகளை செய்து தரவும் உத்தர விட்டு சென்றனர்.  மேலும் அந்தப் பள்ளி வளா கத்தில் விடுதி மாணவிகள் பயன் பாட்டுக்காக கழிவறை மற்றும் குளிய லறை கட்ட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு  செய்யப்பட்டது. ஆனால் இதுவரை  எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்ப டாததால் மாணவிகள் பெரும் சிர மத்துக்கு உள்ளாகின்றனர்.  இதுகுறித்து அப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஹாஜிரா மற்றும் துணைத் தலைவர் தியாகு ரஜினிகாந்த் ஆகியோரிடம் விசாரித்தபோது, “தற்காலிக மாண வியர் விடுதிக்காக கழிவறை மற்றும்  குளியலறை கட்ட உத்தரவு வெளி யான பிறகும் கட்டுமானப் பணிகள் துவக்கப்படவில்லை. இதனால் விடுதியில் தங்கி பயில வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. மேலும் பள்ளியில் மாணவியர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே அரசு உடனடியாக விடுதி இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றனர். கிராமப் புற மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக தீர்வை ஏற்படுத் தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;