districts

img

கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் டன் நெல் தேக்கம் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பக் கோரி மறியல்

திருவாரூர், மார்ச் 7- நேரடி நெல் கொள்முதல் நிலையங்க ளில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை  உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்ப வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடைத்தெரு (திருத்துறைப் பூண்டி-திருவாரூர் சாலை) பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்  திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. மறியலில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.மாலதி, ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், பி.மாத வன், ஜி.பவுன்ராஜ், ராஜாங்கம், தியாக ராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து செய்தியா ளர்களிடம் பேசிய ஐ.வி.நாகராஜன், “திரு வாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி பயிர் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரு கிறது. தற்போது 522 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவ சாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒரு  லட்சம் மெட்ரிக்டன் ணுக்கும் அதிகமான  நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்  முதல் நிலையங்களிலேயே தேங்கியுள் ளது. மாவட்ட நிர்வாகம் திறந்த நிலை சேமிப்புக் கிடங்குகளைத் திறந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றார்.

;