districts

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க கோரிக்கை

திருவள்ளூர் பிப் 7- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு,  தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட வேலையில்லா பணியாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் 10 பேர், ‘மக்களை தேடி மருத்து வம்’ திட்டத்தில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் பணியாற்றினர். கடந்த அக்டோபர் மாதம் கள ஆய்வு இவர்களது பணிகளை பாராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் ்துறை செயலாளரும் அடையாள அட்டை யை வழங்கினர். இந்த சூழலில், ஏற்கனவே பணியில் இருந்தவர்களை நிறுத்திவிட்டு புதிய பணியா ளர்களை தேர்வு செய்ய திருவேலாங்காடு ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் சீனிவாசன் திருவேலாங்காடு ஒன்றிய சுகாதார அலுவலருக்கு கடிதம் கொடுத்து ள்ளார். இதனால் கடந்த ஒரு மாதமாக அந்த 10 பணியாளர்கள் வேலையின்றி தவிக்கி ன்றனர். ஏற்கனவே, பணியில் இருந்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என புதுவாழ்வு திட்ட வேலையில்லா பணியா ளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட திட்ட இயக்குநர் மல்லிகாவிடம் திங்களன்று (பிப். 7)   மனு அளித்து, இந்த பிரச்சனையில் தமிழக அரசும் தலையிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

;