districts

img

“தீயசக்திகளிடமிருந்து அரசியல் அமைப்பை பாதுகாப்போம்” - வழக்கறிஞர் அருள்மொழி

திருவள்ளூர், அக் 2- அனைத்து தரப்பு மக்களையும் பாது காக்கின்ற அரசியல் அமைப்பு சாசனத்தை, தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய தருணத்தில் இருக்கி றோம் என வழக்கறிஞர் அருள்மொழி தெரி வித்துள்ளார். அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட 4வது மாநாடு ஊத்துக் கோட்டையில் சனிக்கிழமை (அக் 1) அன்று நடை பெற்றது. இதில் மேலும் அவர் பேசுகையில்,  சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பின்மை என்ற இரண்டு சொற்களை அரசி யல் அமைப்பின் முகப்பு வடிவமைப்பை காப்பாற்றினோம். ஆனால் மக்கள் மத்தியில் அதன் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கும் அதற்கு ஆபத்து உள்ளது.

நம்மை பாதுகாக்கின்ற அரசி யல் சாசனத்தை நாம் காப்பாற்ற வேண்டிய இடத்தில் தற்போது இருக்கி றோம். இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ, மத நம்பிக்கையற்றவர்களோ இந்த நாட்டினுடைய எல்லா உரிமைகளும் பெற்ற குடிமக்கள்தான். சாமான்ய மக்களின் உரிமை களை பறிப்பதற்கு, இந்த நாட்டில் யாருக்கும் அதி காரம் கிடையாது. உண்மையிலேயே இந்த நாட்டை மக்கள் நல்லி ணக்கத்தோடு வாழ்கிற நாடாக தொடர வேண்டு மானால், இந்த அரசியல் சாச னமும் அதன் உரிமை கொடுத்துள்ள மதச்சார் பின்மை காப்பாற்ற பட வேண்டும் என்றார். அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட 4 வது மாநாடு சனிக்கிழமை (அக் 1) அன்று ஊத்துக் கோட்டையில் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ. எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் த.கன்னியப்பன் வர வேற்றார். சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் இ.கலைவாணி கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் மாநில செயல் தலைவரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஆர். காளமேகம் வேலை அறிக் கையை முன்மொழிந்தார். பொன்னேரி லாயர்ஸ் அசோசியேஷன் தலை வர் இ.மாசிலாமணி, பொன்னேரி அட்வகேட் அசோசியேஷன் தலைவர் டி.பன்னீர்செல்வம், ஊத்துக்கோட்டை பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் கே.குணசேகரன், திருவள்ளூர் வழக்கறிஞர் சீனிவாசன் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர்.அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் எஸ்.சிவக்குமார் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்ட தலைவராக வி.ரீசர், செயலாளராக ஆர்.காளமேகம், பொரு ளாளராக கே.சுதாகர் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
தீர்மானங்கள்
ஊத்துக்கோட்டையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நடுவர் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்பட வேண்டும், திரு வள்ளூர் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில் வழக்க றிஞர்களுக்கு உணவகத்தை திறக்க வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு உதவித்தொகை மாதம் ரூ.5000 வழங்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதி மன்றங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொன்னேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்களை உடனடியாக கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு என அறைகள் (சேம்பர்) கட்ட வேண்டும், பொன்னேரியில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வறை, கழிப்பறை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;