districts

திருவள்ளூர் மாவட்டத்தில் 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

திருவள்ளூர், பிப்,.1 திருவள்ளூர் மாவட் டத்தில் ஆவடி மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் 28-ந் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வாக்கு எண் ணிக்கை வருகிற 22-ந் தேதி  (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத் தில் பதிவாகும் வாக்குகள்  8 இடங்களில் எண்ணப்படு கிறது. ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சிக்கு பட்டாபிராமில் உள்ள இந்து  கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது. பூந்தமல்லி, திருவேற் காடு நகராட்சிகள், திருமழிசை பேரூராட்சிக்கு பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளியிலும், திருத்தணி நகராட்சிக்கு திருத் தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கலைக் கல்லூரியிலும், திருவள்ளூர் நகராட்சிக்கு திருப்பாச்சூரில் உள்ள திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பொன்னேரி பேரூராட்சிக்கு பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயண சுவாமி கல்லூரியிலும் வாக்கு  எண்ணும் மையம் அமைக்கப் பட்டுள்ளன. ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிக்குப்பம், பேரூராட்சிகளுக்கு பஞ் செட்டியில் உள்ள வேலம் மான் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், பொதட்டூர்பேட்டை பள்ளிப் பட்டு பேரூராட்சிகளுக்கு பள்ளிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஊத்துக்கோட்டை பேரூராட் சிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேசன் பள்ளியி லும் வாக்குகள் எண்ணப்படு கிறது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான்  வார்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

;