districts

img

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உதவி கருவிகளுக்கும் ஜிஎஸ்டி வரி திருவண்ணாமலை மாவட்ட மாநாட்டில் கண்டனம்

திருவண்ணாமலை ஜூலை.17- மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உதவி கருவிகளுக்குகூட ஜிஎஸ்டி வரி போட்டுள்ள ஒன்றிய அரசுக்கும் பிரத மருக்கும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட மாநாடு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 4 ஆவது மாநாடு ஜூலை 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பிரதிநிதிகள் மாநாட்டிற்கு, மாவட்டத் தலைவர் சி.ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எஸ். சண்முகம் கொடியேற்றி வைத்தார். மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி துவக்க உரையாற்றினார், மாவட்டப் பொரு ளாளர் பி. சத்யா நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநிலச் செயலாளர் பி. ஜீவா வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நடந்த பொது மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் உரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரை செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த பேட்டரி கார்களை மீண்டும் செயல் படுத்த வேண்டும், திருவண்ணாமலை மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த சமையல றையை மீண்டும் புனரமைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் 
மாவட்டத் தலைவர் சி.ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் ஆர்.சிவாஜி, மாவட்ட பொருளாளர் பி.சத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;