districts

img

அதானி குழுமத்தின் எரிவாயு கிடங்கு அமைப்பதா அரசியல் கட்சிகள் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர், ஆக.5– திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே மக்கள் குடியிருப்புகள், தொழிற் சாலைகள், விவசாய நிலங்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதியில் அதானி குழுமத்தின் மிகப்பெரும் எரிவாயு கிடங்கு அமைக்க உள் ளனர். குடியிருப்புவாசிகளின் இசைவு பெறா மல் இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய் வதற்கு அரசியல் கட்சிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திமுக திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலா ளர் என்.விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.அப்புசாமி, மதிமுக ஒன்றியச் செய லாளர் வி.கே.சந்திரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் பி.கே.கருப்பசாமி, கொம தேக மாவட்ட விவசாய அணி செயலாளர் கே.தேவராஜ், லட்சுமி கார்டன் குடியிருப் போர் நலச் சங்கம் சி.சண்முகசுந்தரம், ஆதி திராவிடர் நலக்குழு மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் கே.ராயப்பன், சமூக ஆர்வலர் ஆர்.சதீஷ்குமார் ஆகியோர் புதனன்று மாவட்ட ஆட்சியர் வினீத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுக்கா, ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில் கருக்கன்காட்டுப்புதூர், ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரு கின்றன. இவர்கள் விவசாயத் தொழிலாளர் களாகவும், நேதாஜி ஆயத்தஆடைப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தொழி லாளர்களாகவும் வேலை செய்து வருகின்ற னர். அதேபோல் லட்சுமி கார்டன் பகுதியில் சுமார் 750 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த குடியிருப்புக்கு அருகில் ஏவிஎஸ் சென்ட் ரல் பள்ளிக்கு மிக அருகில் அதானி குழுமத் தின் எரிவாயு கிடங்கு அமைக்க உள்ளனர்.  

இந்த எரிவாயு கிடங்கு அமைப்பது தொடர் பாக இப்பகுதியில் குடியிருப்போர் என்ற முறையில் இப்பகுதி மக்களிடம் எந்த இசை வையும் கேட்காமலும், ஊராட்சி மன்றத்தில் இதன் அபாயத்தை பற்றி தெரியாமல் தீர்மா னம் போட்டு வழங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. வருவாய்த் துறையினர் தற் போது அளவிடும் பணியில் ஈடுபட்டபோது தான் மக்களுக்கு இங்கு எரிவாயு கிடங்கு ஏற்படுத்தப் போவதே தெரியவந்தது.சாதா ரணமாகவே வீடுகளுக்கு விநியோகம் செய் யும் எரிவாயு உருளைகள் இருப்பு வைக்கும் கிடங்குகளை குடியிருப்பு பகுதியில் அனு மதிப்பதில்லை. ஆனால் இங்கு அமைக்கப் படும் திட்டம், குழாய் வழியாக திருப்பூர் நகர்ப் பகுதிக்கு விநியோகம் செய்ய 6 பெரும் கொள்கலன்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும்பட்சத் தில் நேதாஜி ஆயத்தஆடைப் பூங்கா மற்றும் பெருமாநல்லூர் சுற்று வட்டாரத்தில் உள்ள  அனைத்து பகுதியும் பாதிப்பிற்கு உள்ளா கும்.

அவ்வாறு ஏற்படும்பட்சத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களும், தென்னை, வாழை உள் ளிட்ட விவசாயப் பயிர்களும், வணிக நிறுவ னங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் போன்ற பல கோடி மதிப்பிலான பொருட் சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள் ளது.  எனவே, இத்திட்டத்தை குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் வணிக நிறு வனங்கள் ஆகியவை இல்லாத இடத்திற்கு மாற்றி பல ஆயிரம் உயிர்களையும், பெரும்  பொருட்சேதமும் ஏற்படாமல் பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;