districts

திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் ஊதிய உயர்வு தொழில் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரிடம் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 31- திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் ஒன்றரை லட்சம் விசைத்தறி தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வெள்ளியன்று மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனி டம் திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சம்மேளன தலைவர் பி.முத்துசாமி, ஐஎன் டியுசி நிர்வாகி எம்.நடராஜ், எல்பிஎப் செயலா ளர் மா.சிவசாமி, ஏடிபி செயலாளர் எஸ்.சுப்பி ரமணியம் ஆகியோர் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், சோமனூர், மங்கலம், பல்லடம், அவிநாசி பகுதியில் சுமார் 1.50 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இத்தொழிலாளர் களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 25ல் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் ஏழே கால் ஆண்டுகள், அதாவது 87 மாதங்கள் ஆகிவிட்டது. தற் போது ஏறியுள்ள விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் குடும்பம் நடத்த மிகவும்  கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஒரு தொழிலாளி 10 தறிகளை 12 மணி நேரம் ஓட்டினால் கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை தான் கிடைக்கும். மேலும் இத்தொழிலில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பள மும், பண்டிகை விடுமுறைகள் இல்லாமலும் பணிபுரிந்து வருகிறார்கள். சம்பள உயர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த விசைத்தறி உரிமையா ளர்கள் சங்கம் முன் வராமல் இருக்கிறார்கள். எனவே விசைத்தறி உரிமையாளர்கள் தங்களி டம் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும் தற்போது பெற்றுவரும் சம்பளத்து டன் 100 சதவிகிதம் கூடுதலாக ஊதியம் வழங்க வேண்டும்.

அனைவருக்கும் பண்டிகை விடு முறை, தேசிய விடுமுறைகளுக்கு சம்பளத்து டன் விடுமுறை வழங்கிட வேண்டும்.  அனைவருக்கும் 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் நாளொன்றுக்கு ரூ.750 வழங்க வேண்டும், தார் ஓட்டும் பெண்களுக்கு குறைந்தபட்சம் மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும். அனைத்து நிறுவனங்க ளும், அவர்களிடம் பணியாற்றும் தொழிலா ளர்கள் அனைவருக்கும் விபத்து காப்பீட்டு இன்சூரன்ஸ் அமலாக்கிட வேண்டும். இது தொடர்பாக கடந்த 2019 செப்டம்பர் 16 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத் தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்த நியாயமான, சட்டப்படி அம லாக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களை யும், தொழிற்சங்கங்களையும் அமைச்சர் நேரில் அழைத்துப் பேசி 1.50 லட்சம் தொழிலா ளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு, ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழி லாளர்கள் இணைந்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது சுமூகத் தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண் டுள்ளனர்.

;