districts

img

திருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர், ஜன.27– திருப்பூர் 9ஆவது வார்டு புகழும் பெரு மாள்புரம் பகுதியில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக் கூடம் துர்நாற் றம் வீசும் நிலையில், அதை அங்கிருந்து இட மாற்றம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் முத லாவது மண்டல அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி 9ஆவது வார்டு குமரானந்தபுரம் புகழும் பெருமாள்புரம் 1 முதல் 4 வீதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் வழியாக தினமும் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். இந் நிலையில், சாந்தி திரையரங்கம் எதிர்புறம் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைக் கூடம் அமைக்கப்பட்டு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கிடங்கு செயல்பட தொடங்கி மூன்று மாதத்தில் இப்பகுதியில் ஈ, கொசு தொல்லை, துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு  இன்னல்களை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள், பெரியோர் சுவாசப் பிரச்சனையில் அவதிப்பட்டு வரு கின்றனர். எனவே, இந்த கூடத்தை இங்கிருந்து மாற்றுப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் புதனன்று திமுக செயலாளர் க.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநக ரக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதில், துர்நாற்றம், பூச்சித் தொல்லை வராமல் இருக்க மருந்து தெளித்து உரிய ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த னர். ஆனால், இந்த நடவடிக்கைகள் போதா தது, திடக்கழிவு மேலாண்மைக் கூடத்தை இங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மக்கள் உறுதியுடன் உள்ளனர். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக அப் பகுதி மக்களைத் திரட்டி வலுவான போராட் டம் நடத்தப்படும் என அப்பகுதி பொது மக்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.

;