districts

img

காங்கேயத்தில் சாலை மேம்பாடு பணியின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர், ஏப்.22-

காங்கேயத்தில் சாலை மேம்பாடு பணியின் தரம் குறித்து  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பழைய நொய்யல் ஆற் றுப்பகுதியில் இருந்து காங்கேயம் நகர் பகுதி வரை உள்ள சுமார் 15 கி.மீ தூரம் வரை சாலை அகலப்படுத்தப்பட்டது.

இதில், 7 சிறு பாலங்கள், உள்பட ரூ.8 கோடி மதிப்பில் மேம் பாடு பணியும் நடைபெற்றது. இந்த நிலையில் நத்தக்கா டையூர் அருகே முள்ளிப்புறம் பகுதியில் தார்சாலை அமைக் கும் பணியினை மாவட்ட நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேரில் பார்வையிட்டு தார்சாலை அமைக்கும் பணி, சாலையின் தரம், ஆகியவற்றினை ஆய்வு செய்தார். தொடர்ந்து இந்த சாலை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்து ,பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை யினருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது காங்கேயம் கோட்ட நெடுஞ்சாலை துறை  உதவி பொறியாளர் அருட்செல்வம், உதவி பொறியாளர் கணே சன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

;