districts

ரேசன் கடை  ஊழியர்கள் நியமித்து பொருட்கள் வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 30- திருப்பூர் மாநகரில் நியாயவிலைக் கடை எண் 64 மற்றும் 74 ஆகியவற்றில் தேவையான ஆட்களை நியமித்து தினமும் பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. வளர்மதி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருணாக ரனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எஸ்.நகர் கிளை செயலாளர் இ.பி.ஜெயகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 27ஆவது வார்டுக் குட்பட்ட எல்.கே.ஓ.64ஆம் எண் நியாயவிலைக் கடையில் எவ் வித தங்கு தடையும் இல்லாமல் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது வேறு கடை யையும் இந்த கடை ஊழியர் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு  நாள் பார்க்கச் சொல்லி இருக்கிறீர்கள். ஒரு நாள் விட்டு  ஒரு நாள் கடை திறக்கும் காரணத்தால் பொது மக்களுக்கு பொருள் வாங்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது. ஏற்கெனவே அருகாமையில் இருக்கக்கூடிய 22ஆவது வார்டு எல்கேஓ 74 ஆம் எண் கடையில் பல மாதங்களாக ஆள் நியமிக்க வில்லை. புதிய பணியாளர்  நியமிக்காத காரணத்தால் பொது மக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றது. அந்த கடைக்கு புதிய ஊழியரை நியமித்து அந்த பகுதி மக்களுக்கு தின சரி கடையை திறந்து பொருட்கள் வழங்குவதற்கு நடவ டிக்கை எடுக்கவும், நியாயவிலைக் கடைகள் 64 மற்றும் 74ஆம் எண் கடைகளை தினமும் திறந்து பொது மக்களுக்கு பொருட் கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே நிலை மேலும் தொடருமானால் மக்களைத் திரட்டி கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலை ஏற்படும். எனவே கடைகளை தினமும் திறந்து பொது மக்களுக்கு பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளு மாறு இ.பி.ஜெயகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;