districts

கத்தியைக் காட்டி  வழிப்பறி

அவிநாசி, ஏப்.12- அவிநாசி பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி யில் ஈடுபட்ட இருவரை அவிநாசி போலீசார் ஞாயிறன்று இரவு கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி  முத்துச்செட்டிபாளையம்  பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (35). அவிநாசி கால்நடை மருத்துவனை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பார் உரிமையாளரான இவர், ஞாயிறன்று இரவு டாஸ் மாக் கடை முன் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது மது போதையில் வந்த 3 நபர்கள், முத்துராமலிங்கத்திடம் கத்தி யைக் காட்டி மிரட்டி கடைக்கு வந்தால் மதுபானம் கொடுக்க முடியாதா எனக் கூறி தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, முத்துராமலிங்கம், 3  நபர்களையும் பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பி யோடியுள்ளனர். பிறகு அவிநாசி மடத்துப்பாளையம் பகு திக்குள் நுழைந்த 3 நபர்கள் அவ்வழியாக இருசக்கர வாக னத்தில் வந்து கொண்டிருந்த அரவிந்த் (27) என்பவரை வழி மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாய், கை கடிகாரம் உள்ளிட்டவை பறித்து கொண்டு தப்பி ஒட முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் 2 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் அவிநாசி வள்ளுவர் வீதியைச் சேர்ந்த ஜோயல்சித்தார்த் (22). மற்றும் நேரு வீதியைச் சேர்ந்த  கௌதம் (24). என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயல் சித்தார்த், கௌதம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஆட்டோ  கார்த்திகைத் போலீசார் தேடி வருகின்றனர்.

;