districts

நவ.26 பொது வேலைநிறுத்தம், மறியலில் பங்கேற்க மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி அழைப்பு

திருப்பூர், நவ. 24- நாட்டையும், மக்களையும் சீர ழிக்கும் மத்திய ஆட்சியாளர்களைக் கண்டித்து நவம்பர் 26 ஆம் தேதி யன்று மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில் திருப்பூ ரில் அனைத்துப் பகுதி மக்களும் பங் கேற்று முழு வெற்றி பெறச் செய்யு மாறு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மத் திய மாவட்ட திமுக அலுவலகத் தில் செயலாளர் க.செல்வராஜ் தலை மையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், திமுக தெற்கு மாநகரப் பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராஜ், வடக்கு மாநகரப் பொறுப்பாளர் தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. உண்ணிகிருஷ்ணன், டி.ஜெயபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, நிர் வாகிகள் பி.ஆர்.நடராஜன், ரவி, காங்கிரஸ் நிர்வாகி கதிரேசன், மதி முக மாநகரச் செயலாளர் சு.சிவ பாலன், சம்பத், மனோகரன், விடு தலை சிறுத்தைகள் மாவட்ட செய லாளர் தமிழ்வேந்தன், கொமதேக தம்பி வெங்கடாசலம் மற்றும் முஸ் லிம் லீக், ஐஜேகே உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.  இக்கூட்டத்தில், மோடி ஆட்சி யில் நாட்டில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டு பொருளாதா ரம் வீழ்ச்சி அடைந்து, வறுமை பெருகி, சிறு,  குறு தொழில்கள் முடங் கியுள்ளன. கொரோனா பொது முடக்க உத்தரவைப் பயன்படுத்தி விவசாயிகள், தொழிலாளர்களை ஒடுக்கும் ஜனநாயக விரோத சட் டங்களை நிறைவேற்றி, மாநில உரி மைகளைப் பறித்து வருகின்றனர். இதில், மக்கள் கவனத்தை திசை திருப்ப மதவெறி, சாதி வெறியைத் தூண்டி விட்டு மக்களைப் பிளவு படுத்தும் சதி வேலைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இச் செயலுக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு அதற்கு அடிமைப்பட் டுக் கிடக்கிறது. மக்கள் விரோத, ஜனநாயக விரோத, தேச விரோத மோடி தலைமையிலான மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக 26 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம், மறியல் போராட் டம் நடைபெறுகிறது. எனவே, திருப் பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலா ளர், விவசாயிகள், வியாபாரிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம், மறியல் போராட் டத்தில் கலந்து கொண்டு எதிர்ப் பைத் தெரிவிக்க வேண்டும் என அனைத்து மக்களையும் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி சார் பில் கேட்டுக் கொள்வதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

;