districts

போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பலகை அகற்ற வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 27- திருப்பூர் - அவிநாசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருமுருகன் பூண்டி பேரூராட்சி பகுதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றுமாறு நுகர்வோர் பாதுகாப்பு குழு கேட்டுக்கொண்டுள்ளது. திருமுருகன் பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் உணவு விடுதி ஒன்று நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி விட்டு சாப்பிட அனுமதித்துள்ளது. விளம்பர பதாகையை குறுகிய பாதை என்றுகூட பாராமல் பாதையை ஒட்டி வைத்து இடையூறு விளைவிப்பதை தவிர்க்குமாறு நுகர்வோர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு வின் ஆலோசகர் வே.ஈஸ்வரமூர்த்தி இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை உரி மையாளரிடம் நேரடியாக கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து திங்களன்று  திருமுருகன்பூண்டி பேரூ ராட்சி செயல் அலுவலரிடம் நுகர்வோர் பாதுகாப்பு குழுவினர் புகார் தெரிவித் துள்ளனர். செயல் அலுவலர் உடனடி யாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு பாதையில் வைக்கப் பட்டிருந்த விளம்பர பலகையை அகற்ற ஏற்பாடு செய்தார்.  அதையும் பொருட்படுத்தாமல் சம் பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு அதே இடத்தில் விளம்பர பதாகையை வைத்திருக்கிறார். குறுகிய தேசிய நெடுஞ்சாலைப் பகுதி யில் இவ்வாறான பாதை இடையூறு களைத் தவிர்க்க போக்குவரத்து காவல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும். உணவு விடுதியா னது உணவுபாதுகாப்பு மற்றும் தர நிர் ணய சட்ட விதிகளை கடைப்பிடித்து நடைபெறுகிறதா என உணவுப் பாது காப்பு மருந்து கட்டுப்பாடு துறை அலுவ லர்கள் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் இக் குறையை நிவர்த்திகாண முன்வரும் என நம்புவதாக திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் எஸ்.காதர்பாட்சா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

;