districts

img

நூல் உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 14- நூல் விலை உயர்வை கட்டுப்ப டுத்த வலியுறுத்தி திருப்பூர் மாநக ராட்சி எதிரே உள்நாட்டு ஆடை உற்பத் தியாளர் சங்கத்தினர் சனியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக நூல்  விலை அதிகமாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில், மே மாதம் மேலும் 40 ரூபாய் விலை உயர்ந்தது. ஒரு கிலோ 470 ரூபாய் வரை விற்பனை ஆனது.மேலும் பஞ்சு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. நூல் விலை இன்னும் உயர்த்தப்படும் அச் சுறுத்தல் உள்ளது. எனவே, உடனடியாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு  மற்றும் நூல் ஏற்றுமதியை முழுமை யாக தடை செய்து உள்நாட்டு உற்பத் திக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நூல் இறக்குமதி வரியை ரத்து செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திருப்பூர் உள் நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங் கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், அந்த சங்கத்தின் தலைவர் எம். கே.எம்.பாலசுப்பிரமணியம், செயலா ளர் ரோபோ ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை ஏற்றனர். திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண் முகம், டீமா தலைவர் எம்.பி.முத்து ரத்தினம், நிட்மா தலைவர் அகில் சு. ரத்தினசாமி உள்பட பல்வேறு உற்பத்தி யாளர் சங்க நிர்வாகிகள் இந்த ஆர்ப் பாட்டத்தில் ஆதரவு தெரிவித்தும், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் அமைப்புகள் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பினர்.

;