districts

இயற்கை உபாதை கழிக்க உரிய வசதி ஏற்படுத்திடுக சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 28-

திருப்பூர் மாநகரின் மையப்பகுதி யில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் பொது மக்கள் பாதிக்கப்படுவதுடன், சுமைப்பணி தொழிலாளர்களும் மரண பயத்துடன் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் இயற்கை உபாதை யைக் கழிக்கக்கூட வசதி செய்யப்பட வில்லை. எனவே அதற்கு உரிய வசதி செய்து தருவதுடன், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளையும் ஒருங்கி ணைந்த முறையில் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள் ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி  ஆகியோருக்கு சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் கே.உண்ணிகிருஷ்ணன் புத னன்று விடுத்துள்ள கோரிக்கை வரு மாறு: தி்ருப்பூர் மாநகரப் பகுதியில் குறிப்பாக நகரின் மையத்தில் அமைந் துள்ள அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோயில் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாக்கடை கட்டுவது, சாலை அமைப்பது, குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இனியும் இப் பணிகள் முடிவடையாமல் பொது மக்கள் இயல்பாக போக்குவரத்து செய்ய முடியாத நிலை தொடர்கி றது. இங்கே திட்டமிட்டு ஒருங்கி ணைந்த முறையில் பணிகளைச் செய்வதில்லை. அதிகாரிகளும் இப் பணிகளைக் கவனிப்பதில்லை. குறிப் பாக அரிசிக்கடை வீதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வணிக, வியாபார நிறுவனங்கள் அடர்த்தி யாக இருக்கும் நிலையில் லாரி  மற் றும் சரக்கு வேன்கள் போக்குவரத் தும் அதிகமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட கட்டுமானப் பணிகள் முடி வடையாத நிலையில், சுமைப்பணித் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். சுமை மூட்டைகளை அவர்கள் மரண பயத்துடன் சுமந்து செல்ல வேண்டிய துயரமான நிலை உள்ளது.

எனவே இனியாவது மேற்கண்ட பணிகளை முழுமையாக ஒருங்கிணைத்து திட்ட மிட்ட முறையில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். அதிகாரிகள் தினமும் இந்த பணிகளை கண்காணித்து, மக் கள் நடமாட்டம் தடையின்றி தொடர் வதை உறுதிப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணி கள் நடைபெறுகிறது. ஆனால் இதில் ஏற்கெனவே திறந்த நிலையில் இருந்த சாக்கடைகள் மூடப்படுகிறது. பல நூறு தொழிலாளர்கள் வேலை செய்வதுடன், தினமும் ஆயி ரக்கணக்கான மக்கள் வந்து செல்லக் கூடிய இந்த பகுதியில் அவர்கள் இயற்கை உபாதையைக் கழிக்க இடம் இல்லை. எனவே மாவட்ட மற் றும் மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதி யில் இயற்கை உபாதை கழிக்க வீதிக்கு ஒரு இடம் வீதம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

;