districts

டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டக்கூடாது மின்வாரியம் அறிவுறுத்தல்

திருப்பூர், மார்ச் 3-

 கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் டிரான்ஸ்பார் மர் அருகே குப்பை கொட்ட கூடாது என மின்வாரிய அதி காரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கோடை வெப்பம் தற்போது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், திருப்பூர் மாநகரிலும், அதனை சுற்றி யுள்ள பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் அமைந் துள்ள இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டு வது அதிகரித்து வருகிறது. இந்த குப்பைகளால் தீ விபத்து ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர்கள் முற்றிலும் எரிந்துபோக வாய்ப்பு உள்ளதாகவும்,  இதன் காரணமாக பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு தீ விபத்தின் போது பாதுகாப்பற்ற சூழல் உருவாகும் நிலை உள்ளதாக வும், எனவே பொது மக்கள் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடங்களில் குப்பைகளை கொட்டாமல், குப்பை தொட்டி களில் கொட்டி தீ விபத்தை தடுக்கவும், பாதுகாப்பான மின் சாரத்தை அனைவருக்கும் வழங்கிட உதவ வேண்டும் என திருப்பூர் மின் வாரிய அதிகாரிகள்  அறிவுறுத்தியுள்ளனர்.

;