districts

தனியார் கட்டணப் பள்ளிகளை இலவசப் பொதுப்பள்ளிகளாக மாற்றிடுக கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை

திருப்பூர், மே 12- தனியார் கட்டணப் பள்ளிகளை இலவசப் பொதுப்பள்ளிகளாக மாற்ற வேண்டும் என கல்வி மேம் பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கல்வி மேம் பாட்டுக் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் சு.மூர்த்தி விடுத் துள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது, பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி தமிழ்நாட்டில் மலர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட் சிக் காலத்தில் சமூக நீதிக்கு அடை யாளமாக சமத்துவபுரங்கள்  உரு வாக்கப்பட்டன. தமிழகமே சமத்து வபுரமாக மாறவேண்டும் என்பதே திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர ைத்துள்ள மக்களின் விருப்பம். சமூகப் பாகுபாடுகளை ஒழித்து சமத் துவத்தை வளர்ப்பதில் பள்ளி களுக்கு முதன்மை இடம் உண்டு. 1950 இல் நாட்டை சமயசார்பற்ற, சமதர்ம, மக்களாட்சிக் குடியரசாக அறிவித்தோம். அடுத்த 20 ஆண்டு களில் தமிழ்நாட்டில் 30 ஆயிரம் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பல்வேறு சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்த மக்களின் பிள்ளைகள் அனைவரும் முதன்முதலாக ஒன் றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் அமர் வதை அரசுப் பள்ளிகள் தான் சாத்தி யமாக்கின. மின்சார வசதி கூட இல்லாத நூறு பேர் வசித்த குக்கிரா மங்களில் கூட அரசுப் பள்ளிகள் மூலம் கல்வி வெளிச்சம் பாய்ந்தது.  பாகுபாடுகள் மண்டிக் கிடந்த கிரா மங்களில் அரசுப் பள்ளிகள் மூலம் சமத்துவம் சாத்தியமானது. திமுக வின் சமூக நீதிக் கொள்கையை காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் நிலைநாட்டின.    சமத்துவப் பள்ளிகளாக இருந்த அரசுப் பள்ளிகள் இன்று அடித்தட் டுப் பிள்ளைகளின் பள்ளிகளாக மாறியுள்ளன. வசதியுள்ளவர்களின் பிள்ளைகள் தனியார் கட்டணப் பள்ளிகளில் படிக்கின்றனர். கல்வி  வணிகர்களிடம் கருப்புப் பணம் பெருகிக்கொண்டுள்ளது. மருத் துவப் படிப்பிற்கான நீட் தேர்வி னால் சமூக நீதிக்கு கேடு விளை வதைப் பெரிதாகப் பேசுகிறோம்.

ஆனால், கல்வியை வணிகர் களிடம் ஒப்படைத்ததால் மழலையர் கல்வி தொடங்கி ஒட்டுமொத்தக் கல்வியிலும் சமூக நீதி ஒழிந்து விட்டதைப் பேசத் தவறுகிறோம். ஏழைகள் விலையின்றி பெரும் கல்வியும் வசதியானவர்கள் விலை கொடுத்துப் பெரும் கல்வியும் சம மற்றதாக உள்ளன. கல்வியைத் தனியார் வணிகர்களிடம் தாரை வார்த்ததால் அனைவருக்கும் சம மான கல்வி வாய்ப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது. கல்வி உரிமைச் சட்டம் 2009 மூலம் தனியார் கட் டணப் பள்ளிகளில் 25 சதவிகிதம் அளவிற்கு நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் சேர்ந்து அரசின் கட்டணத்தில் படிக்க வழி செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப் பில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கவும் கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள் ளது. இச் சட்டங்கள் மூலம் கல்வி வழங்குவதில் சமமற்ற நிலை நீடிப்பதையும்  ஏழைகளுக்கு சமூக அநீதி இழைக்கப்படுவதையும் முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. பின்னோக்கிய ஆய் வற்ற, தொலை நோக்குப் பார்வை யற்ற வாக்கு வங்கிச் சட்டங்கள் இவை. ஏழைகளில் மிகக் குறை வான எண்ணிக்கையினரை மிகக் குறைவான கல்வி வாய்ப்புகளைப் பெறச் செய்வதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது.

அனைவரும் சமமான மதிப்புகளோடும், மாண்புகளோ டும், வசதிகளோடும் வாழ்வதற்கும்  முன்னேறுவதற்கும் ஏற்ற கல்வி அமைப்பை காலம் கடந்தாவது உரு வாக்க வேண்டும். பல்வேறு வளர்ந்த நாடுகளில் பின்பற்றப் படும் அருகமைப் பள்ளி அமைப் பிலான பொதுப்பள்ளி முறையைத் தமிழ்நாட்டிலும் உருவாக்க வேண் டும். ஜனநாயக நெறிப்படியான இப் பள்ளி அமைப்பு முறையை 1966 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் கல்விக் குழுக்களும் வலி யுறுத்தியுள்ளன.  

தனியார் அறக்கட்டளை முத லீட்டில் நிறுவப்பட்டு பெற்றோர் களின் கல்விக் கட்டண நிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளை அரசு நிதியில் இயங்கும் கட்டண மில்லாப் பள்ளிகளாக மாற்றி  அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டி லும் பொதுப்பள்ளி முறையை சாத்தியமாக்க முடியும். இதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான வழி முறைகளை ஆராய தமிழ்நாடு அரசு உடனடியாக கல்வி வல்லுனர் குழுவை அமைக்கவேண்டும் இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;