districts

img

வகுப்புவாத பாசிச எதிர்ப்புப் போராளி தா.பாண்டியன்

திருப்பூர், பிப்.28 -

வகுப்புவாத, பாசிச எதிர்ப்பு  போராளி தா.பாண்டியன் என திருப்பூர், கோவை மாவட்டங் களில் நடைபெற்ற இரங்கல்  நிகழ்ச் சியில் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் திருப்பூரில் ஞாயிறன்று நடை பெற்றது. தியாகி குமரன் சிலை முன்பிருந்து இந்த ஊர்வலம்  தொடங்கி குமரன் சாலை, நொய் யல் பாலம் வழியாக மாநகராட்சி அருகில் நிறைவடைந்தது. இந்த  ஊர்வலத்தில் தா.பாண்டியன் உரு வப்படம் மலர் மாலையுடன் சிவப்பு பதாகையின் பின்புலத்தில் வாகனத்தில் கொண்டு வரப்பட் டது.நிறைவாக மாநகராட்சி அலு வலகம் எதிரில் நடைபெற்ற இரங் கல் கூட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.காளியப்பன் தலைமை வகித்தார்

. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் எம்.ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச்செயலாளர் செ.முத்துக்கண்ணன், திமுக சார்பில் சி.கோவிந்தசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் வி.ஆர். ஈஸ்வரன், மதிமுக சார்பில் வழக் கறிஞர் ச.கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலா ளர் தமிழ்வேந்தன், தபெதிக சார்பில் அங்ககுமார், கொமதேக சார்பில் சுரேஷ், முஸ்லிம் லீக் சார் பில் சையது முஸ்தபா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் முன்னா உட் பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வா கிகள் தா.பாண்டியனின் சிறப்பு களை நினைவு கூர்ந்து பேசினர்.நிகழ்ச்சியின் நிறைவாக அனை வரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஐ மாவட்ட  செய லாளர் வி.சுந்தரம் தலைமை வகித் தார். இதல் அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்கள் பங் கேற்று இரங்கல் உரையாற்றி னர்.முன்னதாக தா.பாண்டியன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில்,  மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பி னர் சி.பத்மநாபன், மதிமுக மாந கர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார், தேமுதிக மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், கொமதேக செயலாளர் தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் இலக்கியன், தபெ திக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன்  உள்ளிட்ட ஏராள மனோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

;