districts

img

புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்

அவிநாசி, ஜன.1- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அவிநாசியில் ஆங்கில புத்தாண்டு புத்தகங்களோடு கொண்டாடப் பட்டது. இந்நிகழ்வில், தமுஎகச மாநில செயற் குழு உறுப்பினர் ஈஸ்வரன், ஒன்றிய கவுன் சிலர் முத்துச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் ராமமூர்த்தி, ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதனைத்தொடர்ந்து, கதை கதை யாம் காரணமாம் - சுசீலா, தமிழகத்தின் இன்பமயமான வரலாறு -சேவியர், ஓய்ந்தி ருக்க லாகாது -சூரிய பிரகாஷ், திரைப் பள்ளி பயிற்சி அனுபவம் -சின்னராசு உள் ளிட்ட பல்வேறு நூல்கள் அறிமுகப்படுத் தப்பட்டது.  முன்னதாக, மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.தங்கவேல், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கருப்பு கருணா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

;