districts

img

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியால் தனித்தீவு பகுதியாக மாறிய குடியிருப்பு

திருப்பூர், மே 7- திருப்பூரில் மேற்கொள்ளப் பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியால் 600க்கும் மேற்பட்ட வீடு கள் கொண்ட குடியிருப்பு பகுதிகள் தனித்தீவு போல் மாறிவிட்டன. திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகின் றன. பொதுவாக திட்டமிடல் முன்ன றிவிப்பு இல்லாமல் இந்த பணிகள் நடைபெறுவதால் திருப்பூர் மாநக ரம் முழுவதும் மக்கள் பல விதங்க ளில் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் கிழக்குப் பகுதியில் மக்கள் அடர்த்தி மிகுந்த எம்எஸ் நகர் பகுதியில் இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட கொங்கு நகர் பிரதான சாலையை காங்கிரீட் சாலையாக மாற்றும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கம் போல் இந்த பணியிலும் மக்களுக்கு முன்னறிவிப்பு, மாற்று பயணப் பாதை, திட்டமிடல் இல்லாமல் திடீ ரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. புதிய பஸ் நிலையம் பி.என்.ரோடு பகுதியில் இருந்து எம்எஸ் நகர் வரக்கூடிய 60 அடி சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காங் கிரீட் சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியது. எம்.எஸ்.நகர் தாண்டி திருநீலகண்டபுரம் செல் லும் வரையிலான பகுதியில் காங் கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பழைய தார்ச்சா லையை தோண்டிவிட்டு காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வரும் நிலை யில் சாலையின் கிழக்குப்புறம் இருக்கக்கூடிய குடியிருப்புக ளுக்கு வந்து செல்வதற்கான பாதை கள் பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக ஈ.ஆர்.பி. லே அவுட், எஸ்.எஸ்.நகர் விரிவு, திருநீலகண்ட புரம் 2ஆவது வீதி வரை ஆறு குறுக் குப் பாதைகளும் அதைச் சார்ந்து குடியிருப்புகளும் உள்ளன.

இங்கு  ஏறத்தாழ 600 வீடுகள் உள்ளன. அத் துடன் இந்த அனைத்து பகுதிகளி லும் பனியன் தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன. கொங்கு பிர தான சாலையில் காங்கிரீட் சாலை அமைப்புடன், தோண்டிப் போடப் பட்ட பள்ளமான பகுதியில்தான் வாகனப் போக்குவரத்து நடைபெற வேண்டியுள்ளது. அத்துடன் குறுக் குப் பாதைகளை இணைக்கும் பகு தியிலும் போக்குவரத்து செல்ல முடி யாத அளவுக்கு மிகப்பெரும் பள் ளங்களாக உள்ளன. எனினும் இந்த இடர்பாடான நிலையை சமாளித் துக் கொண்டுதான் இந்த பகுதி மக் கள் வாகனப் போக்குவரத்து நடை பெற வேண்டியுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலமாக இந்த பகுதி முழுவதும் தனித்தீவு  போல் துண்டிக்கப்பட்டதாக உள் ளது. இருசக்கர வாகனங்களில் செல்வதே சிரமமாக இருக்கும் நிலையில், கார், வேன் மற்றும்  சரக்கு வாகனங்கள் போக்குவரத் தும் சிரமத்துக்கு உரியதாக உள் ளது.

காங்கிரீட் பாதை போக எஞ்சிய பகுதி மிகவும் குறுகலாக ஒரு வாக னம் போனால் மறு வாகனம் எதிர் திசையில் வர முடியாத அளவுக்குத் தான் உள்ளது. தப்பித்தவறி எதிரும் புதிருமாக வாகனங்கள் வந்துவிட் டால் அங்கு முட்டுக்கட்டை நிலை ஏற்படும். ஏதேனும் ஒரு வாகனம் பின்னால் போனால்தான் போக்குவ ரத்து தொடர முடியும். அவசரத் தேவைக்கு வாகனங்கள் வந்து செல் வதும் முடியாது.

எனவே, இந்த பகுதியில் காங்கி ரீட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பள்ளமான பகுதி யையும் செப்பனிட்டு வாகனப் போக் குவரத்து, மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்குத் திரும்ப உடன டியாக மாநகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். கொங்கு பிரதான சாலை முழுவதும் வேலை முடியும் வரை மாற்றுப் பாதை, திட்ட மிட்ட முறையில் வேலை செய்து மக் களின் இடர்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் மக்கள் கூறு கின்றனர்.

;