districts

ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டு சிறை குற்றவாளி தலைமறைவு

திருப்பூர், ஏப்.16- திருப்பூரை தலை மையிடமாக கொண்டு ஈமு கோழிப்பண்ணை நடத்தி பொதுமக்களி டம் பண மோசடி செய்த வருக்கு கோவை நீதி மன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. எனினும் அந்த குற்றவாளி காவல்துறை வசம் சிக் காமல் தலைமறைவா னார். திருப்பூரை தலை மையிடமாக கொண்டு திருப்பூர் நாச்சிபாளை யம் தங்கம் நகர் பகுதி யில் சபரி ஆண்டவர் ஈமு பார்ம் செயல்பட்டு வந் தது. திண்டுக்கல் மாவட் டம், கன்னிவாடி பகுதி யைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி (49). என்பவர் இந்த ஈமு கோழி பண்ணை நடத்தி வந் தார். இதில், இணையக் கூடிய முதலீட்டாளர்க ளுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித் தார்.

இவருடைய திட் டத்தை நம்பி முதலீடு செய்த 11 பேரிடம்  ரூ.15 லட்சத்து 58 ஆயிரத்து  800 மோசடி செய்து  விட்டு தலைமறைவா னார்.  இந்நிலையில், திருப் பூர் மாவட்டம், மூகாம் பிகை நகர் பகுதியில் வசிக்கக்கூடிய முதலீட் டாளர் சக்திவேல் (41). என்பவர் திருப்பூர் குற் றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீ சார் 406, 420 சட்டப் பிரிவு களின் கீழ் வழக்குப்ப திவு செய்து சபரி, ஈஸ் வரமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை பொரு ளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஈஸ்வர மூர்த்தி பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந் நிலையில், இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளர் நலன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 அதற்கான தீர்ப்பு வியா ழனன்று வழங்கப்பட் டது.  இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி ரவி, குற்றவாளி ஈஸ்வர மூர்த்திக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை யும் ரூ.15 லட்சம் அப ராதமும் விதித்து தீர்ப்ப ளித்தார். வியாழனன்று தீர்ப்பு தேதி என  தெரிந்தும் ஈஸ்வர மூர்த்தி கோர்ட்டில் ஆஜ ராகாமல் திடீரென தலை மறைவானார். இதைத் தொடர்ந்து நீதிபதி ரவி குற்றவாளியை பிடிக்க பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

;