திருநெல்வேலி, நவ.13- நெல்லை மாவட்டம் பாப்பாகுடியில் சமத்துவ புரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார் பில் குழந்தைகள் தினம் இனிப்பு வழங்கி கொண்டா டப்பட்டது. பலூனில் அகில இந்திய மாநாடு லோகா போட்டு பெண் குழந்தைகளை பாதுகாப் போம், பெண்குழந்தைகள் உரிமைகளை வென்றெ டுப்போம் என்று உறுதிமொழி யேற்பு நிகழ்ச்சி நடத்தி பலூன் பறக்கவிடப்பட்டது.குழந்தைகளும் பெண் களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். அடுத்து பாலர் சங்கம் புதியகிளை அமைக் கப்பட்டது. கன்வீனராக தமிழ்செல்வி தேர்வுசெய்யப் பட்டார். இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலா ளர் பி.கற்பகம், பாப்பாக்குடி ஒன்றியபொருளாளர் ரேவதி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் லெட்சுமி, பார்வதி மற்றும் முத்து சந்தியா உள் பட கலந்து கொண்டனர்.