districts

img

திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, மே 21-

   திருச்சிராப்பள்ளியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.

  இந்தியா யமஹா மோட்டார்  (ஐஒய்எம்) மற்றும் அதன் அங்கீ கரிக்கப்பட்ட டீலர்ஷிப் எஸ் எஸ்  மோட்டோ கார்ப்ஸ் அண்டு போனிக்ஸ் மோட்டார்ஸ்  இணைந்து ‘மெகா மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி’யை திருச்சி ராப்பள்ளியில் ஞாயிறன்று நடத்தியது. இதில் சுமார் 56 யமஹா வாடிக்கையாளர்கள்  கலந்து கொண்டனர். 110-க்கும் மேற்பட்டோர் பல ஈடு பாடு நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

    ஃபாசினோ 125 ஃபை ஹைபிரிட், ஆர்  உள்ளிட்ட யமஹா ஹைபிரிட் ஸ்கூட்டர்க ளின் சிறந்த மைலேஜ் குறித்து பார்வையாளர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே  மெகா மைலேஜ் சேலஞ்ச் நடத்துவதன்  நோக்கம் எனக் கூறிய அதன் நிர்வாகிகள்,  மெகா மைலேஜ் சேலஞ்ச் நடவடிக்கையில்  பங்கேற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக் கும் யமஹா தனது மனமார்ந்த பாராட்டு களைத் தெரிவித்துள்ளது. நன்றியின் அடை யாளமாக, ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் வெகுமதி வழங்கப்பட்டது என்றனர்.  

   மேலும் அவர்கள் கூறுகையில், எரிபொ ருள் விலை உயர்ந்து வரும் இந்த காலகட்டத் தில், யமஹாவின் மைலேஜ் சேலஞ்ச் செயல் பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்வாக உருவெடுத்துள்ளது. எரிபொருள் செலவுகள் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், வாடிக்கை யாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வ தில் யமஹா முக்கியப் பங்கு வகிக்கிறது என்றனர்.