புதுக்கோட்டை, அக்.22 - புதுக்கோட்டையைச் சேர்ந்த மறைந்த மூத்த எழுத்தாளர் செம்பை மணவாளன், பத்திரிகையாளர் கே.டி.கந்தசாமி ஆகி யோரின் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிறன்று நடை பெற்றது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா தலைமை வகித்தார். செம்பை மண வாளனின் படத்தை பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலர் டாக்டர் த.அறம், கே.டி.கந்த சாமியின் படத்தை அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியச் செயலர் டி.எஸ்.நடராஜன் ஆகியோர் திறந்து வைத்த னர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் த.செங்கோடன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் நா.முத்து நிலவன், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, வாசகர் பேரவையின் செயலர் பேரா.சா.விஸ்வ நாதன் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரையாற்றி னர். முன்னதாக மாவட்டச் செயலர் சி.பாலச் சந்திரன் வரவேற்றார். பேரா.செம்பை முரு கானந்தம் நன்றி கூறினார்.