பச்சைமலை அடிவாரத்தில் அமைந் துள்ள இயற்கை வளங்கள் நிறைந்த கிராமம், மேல கணவாய் என்று அழைக்கப்படும் களரம்பட்டி கிராமம். பச்சை மலைகளில் வாழ்ந்து வரும் மலை வாசி மக்கள் ஏழு கன்னிமார்கள் சிலை களை தேவதைகளாக வழிபட்டு வந்ததாக வும், பெருமழை பெய்த பொழுது ஏற்பட்ட வெள்ளப்ப்பெருக்கில் சிலை கள் அடித்து வரப்பட்டு அடிவாரத்தில் அமைந்துள்ள களரம்பட்டி கிராம ஏரியில் வந்து புதையுண்டு கிடந்ததாகவும், மேற்படி சிலைகளை ஏரியில் ஆடு ,மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பட்டிய லின சிறுமி பார்த்துவிட்டு கிராம மூப்பரி டம் தகவல் சொன்னதாகவும், பட்டியலி னத்தை சேர்ந்த மூப்பர் சில ஆட்களை அழைத்துச் சென்று கடப்பாரை மூலம் தோண்டி பார்த்தபோது ஏழு சிலைகள் கிடைத்ததாகவும், கடப்பாறையால் தோண்டும் பொழுது ஒரு சிலையின் மூக்கு மீது மோதி,மூக்கின் நுனி சேதம் அடைந்த தாகவும் கூறப்படுகிறது. அந்த சிலைக ளுக்கு தேம்பாடி அம்மன்,வரவாடி அம்மன், திரவாடி அம்மன், செல்லியம் மன், நீலியம்மன், முக்கோணத்தம்மன், வெள்ளம்தாங்கி அம்மன் என்று பெயர் கள் சூட்டி களரம்பட்டி, லாடபுரம், சத்திர மனை, அரனாரை, பெரம்பலூர் ஆகிய ஊர்களின் ஏரிகளுக்கு அருகே கோவில் கட்டி பட்டியலின மக்களும், பிற்படுத்தப் பட்ட மக்களும் குலதெய்வமாக இன்றைக் கும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேகம்
இந்நிலையில், களரம்பட்டியில் பட்டிய லின மக்களால் கண்டெடுக்கப்பட்ட தேம் பாடி அம்மனுக்கு அனைத்து சாதியின ரும் சேர்ந்து பணம் வசூலித்து கோவில் கட்டியுள்ளனர். கோலில் உள்ள தேம்பாடி அம்மன் சிலையின் மூக்குப்பகுதி இன் றைக்கும் உடைந்து போய் உள்ளதை பார்க்க முடியும், இது சம்பந்தமான பாட லும் திருவிழா நேரத்தில் பாடப்படு வதுண்டு. மேலும், களரம்பட்டியில் உள்ள தேம்பாடி அம்மன் கோவிலில் அனைத்து சாதியினரும் எவ்வித சாதிய பாகுபாடு இன்றி கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்து வந்தனர். கோவிலின் தர்மகர்த்தாவாகவும், காரி யஸ்தராகவும் இருந்து வந்துள்ளனர். இக்கோவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 8.9.2024 அன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பட்டிய லின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என பூசாரி வகையறாவை சேர்ந்த சில இளைஞர்கள் வீண் தகராறு செய்து சாதிக் கலவரம் உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு உள்ளனர். ஆனால் எண்ணிக்கையில் கூடுதலாக வசிக்கும் களரம்பட்டி பட்டியலின மக்கள் எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகா மல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு கொடுத்ததனர். அதன் பேரில் 28. 8 .2024 அன்று வட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற இரு தரப்பும் கலந்து கொண்ட அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 8. 9. 2024 அன்று நடை பெற்ற கோவிலில் கும்பாபிஷேகத்தில் பட்டியலின மக்களும் கலந்து கொண்டு பூஜை செய்துள்ளனர்.
ஒப்பந்தத்தை மீறி...
கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் கழித்து நடைபெற்ற மண்டல பூஜையில் ஒப்பந்த்தை மீறி பட்டியலின மக்களை அனுமதிக்க முடியாது என்று மீண்டும் பூசாரி வகையறா இளைஞர்கள் அடாவடி யாக தகராறு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பட்டியலின மக்கள், பெரம்பலூர் சார் ஆட்சியரிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் பெரம்ப லூர் சார் ஆட்சியர் 27.10.2024 அன்று இரு தரப்பும் கலந்து கொண்ட அமைதி பேச்சு வார்த்தை நடத்தி மண்டல அபிஷேகம் முடித்து சாமி ஊர்வலம் வரும்பொழுது பெரிய கடை தெரு, போஸ்ட் ஆபீஸ்தெரு ஆகிய இடங்களில் பட்டியலின மக்கள் தாம்பாளத் தட்டில் தேங்காய்,பழம் வைத்து பூஜை செய்து கொள்ளலாம் என இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி பூசாரி வகையறா இளைஞர்கள், பட்டியலின மக்கள் பூஜை செய்வதை தடுக்க சாதி வெறியை கிளப்பி சிலரை அழைத்துக் கொண்டு மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்துள்ளனர். பூஜைக்கு அனுமதி மறுத்து வழக்கு இந்நிலையில் காவல்துறையினர் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பட்டியலின மக்களை ஒப்பந்தப் படியும் ,சட்டப்படியும் வழிபாடு செய்ய பாதுகாப்பு கொடுத்து பூஜை செய்ய அனுமதிக்காமல், பட்டிய லின மக்களின் பூஜை தாம்பாள பைகளை பறிமுதல் செய்ததோடு, பட்டியலின மக்கள் மீது வழக்கும் போட்டுள்ளனர். இது எஸ்சி., எஸ்டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்படி குற்றமாகும். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பட்டியலின மக்களோடு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் என். செல்லதுரை, ரங்கநாதன்,கோகுல கிருஷ்ணன், கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் சென்று புகார் மனு கொடுத்தனர். ஆயினும் இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படாததால் 22.11. 2024 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் துணைப் பொதுச் செயலா ளர் ப. செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் செய்வதென்று முடிவு செய் யப்பட்டுள்ளது. தமிழக அரசு இதில் தலை யிட்டு நடவடிக்கை எடுத்து பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்ய அனுமதியும், பாது காப்பும் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் டிசம்பர் 20 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலை வர்கள் தலைமையில் பட்டியலின மக்க ளை அழைத்துக் கொண்டு ஆலய நுழைவு போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.