விருதுநகர், மே.3-
விருதுநகர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒடிசா மாநிலத் தொழிலாளி ஒருவர் ரயில் மோதியதில் உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம், நபரங்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதேஷ்யாம் கண்டா (27). இவர் விருதுநகர் அருகே சூலக் கரையில் உள்ள தனியார் போர்வெல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். புதனன்று காலை, துலுக்க பட்டி பகுதிக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில், விருதுநகர்-தூத்துக்குடி செல்லும் ரயில்வே தண்டவாளப் பகுதியை ராதேஷ்யாம் கண்டா கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.