districts

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை போலியான தகவல்களை நம்பாதீர்

சென்னை,மே 12-

   சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரப் பூர்வமற்ற இணையதள வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது.  

    இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரயில்  நிறுவனத்திற்கு பணியா ளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறு வனத்திற்கோ வழங்கப்பட வில்லை. பணியாளர்கள் தேவையின்போது அதற் கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முக வரியில் வெளியிடப்படும். இதைத் தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலை வாய்ப்பு செய்தித்தாள்களில் அறிவிப்புகள் வெளியிட ப்படுகின்றன.

   எனவே, வேலை வாய்ப்புக்குத் தகுதியுடைய வர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளிவரும் அறி விப்புகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்த வொரு இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளிவரும் போலியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். பொய்யான இணைய தளத்தில் வெளி யாகும்  செய்திகளை, விளம்பரங்களை நம்பி அதிகாரபூர்வமற்ற தனியா ரிடம் வேலை தேடி இழப்பு கள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப் பேற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.