மன்னார்குடி, ஆக.4 -
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பயிற்சி முகாமிற்கான வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் நீடாமங்கலத்தில் நடைபெற்றது. குமாரராஜா தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். பயிற்சி முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரையிடம் கட்டிட நிதி முதல் தவணை யாக ரூ.25,000 கொடுக்கப்பட்டது.