districts

திருச்சி முக்கிய செய்திகள்

பசித்தோருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள்

அறந்தாங்கி, மே 29 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் தாக்கத்தினால் அவதிப்படும் பொது மக்க ளுக்கு, தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர். அதோடு பசித்தவ ருக்கு உணவு வழங்கும் வகையில், தினசரி காலை யில் உணவு வழங்கி வரு கின்றனர். அந்த வகையில்  புதனன்று புவனா செந்தில்,  மதிவாணன் சார்பாக, சமூக சேவை செய்யும் தன் னார்வலர்கள் ஆதி மோக னகுமார் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முருகே சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேர்க்கை சான்றிதழ் வழங்கல்

அறந்தாங்கி, மே 29- மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி யில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை  புதனன்று கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது.  டிப்ளமோ சிவில் இன்ஜி னியரிங், டிப்ளமோ மெக் கானிக்கல் இன்ஜினிய ரிங். டிப்ளமோ எலக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், டிப்ளமோ  கம்ப்யூட்டர் இன்ஜினிய ரிங், டிப்ளமோ கமர்சியல்  பிராக்டிகல் இன்ஜினிய ரிங் ஆகிய பாடப் பிரிவு களுக்கு 320 இடங்களுக்கு  மாணவர் சேர்க்கை கலந் தாய்வி நடைபெற்றது. இதில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை  சான்றிதழ்கள் கல்லூரி முதல்வர் ச.குமார் வழங்கி னார்.

காருக்குள் ஒப்பந்ததாரர் மர்ம மரணம்

தஞ்சாவூர், மே 29-  தஞ்சாவூர் அருளா னந்த நகர் முதலாவது தெருவிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத் தில், திங்கள்கிழமை நின்ற  காரின் பின் இருக்கை யில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த மருத்துவ மனை ஊழியர்கள் கார் கதவு கண்ணாடியை உடைத்து, திறந்து அவரை மீட்டனர். அவரை மருத்து வர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கெனவே உயிரி ழந்தது தெரிய வந்தது. தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினர் நிகழ் விடத்துக்குச் சென்று விசா ரணை மேற்கொண்டனர். அதில், அவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகேயுள்ள சிந்தாமணி குடியிருப்பைச் சேர்ந்த தியாகராஜன் (52) என்ப தும், மஸ்கட் நாட்டில் ஒப்பந் ததாரராகப் பணியாற்றி வருவதும், ஒரு மாத விடு முறையில் தஞ்சாவூருக்கு வந்த அவர், நாஞ்சிக் கோட்டை சாலையிலுள்ள தனியார் மதுபானக் கூடத் தில் மது அருந்தியதும், காரில் வீட்டுக்கு திரும்பும் போது மர்மமான முறை யில் உயிரிழந்ததும் தெரிய வந்தது. மேலும் மதுபானக் கூடம், நாஞ்சிக்கோட்டை சாலை, அருளானந்த நகர், மருத்துவமனை வளாகம் ஆகிய பகுதிகளி லுள்ள கண்காணிப்பு கேம ராக்களில் பதிவான காட்சி களைக் காவல் துறையி னர் ஆய்வு செய்து வரு கின்றனர். விசாரணைக்கு பின்பே தியாகராஜன் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என காவல்  துறையினர் தெரிவித்தனர்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.7850 வழங்க கோரிக்கை

கும்பகோணம், மே 29- தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு  பெற்ற ஊழியர் சங்கத்தின், தஞ்சை மாவட்ட சங்க அமைப்பு  கூட்டம் ஜுன் 1 அன்று தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்க பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்கிட வலியு றுத்தி, சங்க அமைப்புக்கு கூட்டத்திற்கு கும்பகோணம், திருவி டைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் பகுதிகளில் இருந்து  தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கத்தை அமைப்பது  என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தை விளக்கி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் பழ.அன்புமணி, ஜி.கண்ணன், பக்கிரிசாமி, பன்னீர்செல்வம், உதயகுமார், அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் நித்யா னந்தம், திரிபுரசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேருந்து வரும் வழியில் பெட்ரோல் குண்டு வீசிய  இளைஞர் கைது

அரியலூர், மே 29 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்கபாளை யம் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (21) டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதி யில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக் கும் இவருக்கும் மன வருத்தம் இருந்ததாகவும், அந்த பெண் பிரேம் குமாரிடம் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊருக்கு செல்வதற்காக அந்தப் பெண் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, அங்கு வந்த பிரேம்குமார், அவ்வழி யாக காட்டுமன்னார்குடியிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நரசிங்கபாளையம் காலனி பேருந்து நிறுத்தத் திற்கு அருகே வருவதற்கு முன்னால், சாலையில் பெட்ரோல் குண்டை வீசி  உள்ளார். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்து எரிந்ததை பார்த்த பேருந்து ஓட்டு நர் முன்னெச்சரிக்கையாக பேருந்தை நிறுத்தி விட்டார். பின்னர் பிரேம் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த மீன்சுருட்டி  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு  வீசிய பிரேம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆவின் பால் வேன் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்  அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திருச்சிராப்பள்ளி, மே 29 - திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இருந்து  திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளைச்  சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு தினமும் 1.20  லட்சம் லிட்டர் பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படு கிறது. இந்த பாக்கெட் பால்கள் ஒப்பந்த அடிப்படையில், 42  சரக்கு வேன் மூலம் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. கடந்த ஓர் ஆண்டாக இந்த வேன்களுக்கு தர வேண்டிய வாடகை தொகை, 4 மாதமாக நிலுவை வைத்து கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதத் தொகையையும் இதுவரை கொடுக்கவில்லை.  இதுகுறித்து ஆவின் நிர்வாக அதிகாரியிடம் பலமுறை கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை யடுத்து செவ்வாயன்று நள்ளிரவு முதல் ஆவின் வேன்களில் பாக்கெட் பால்களை ஏற்றாமல், ஆவின் பால் வண்டி ஓட்டு நர்கள் மற்றும் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டத்தின் காரணமாக திருச்சி, பெரம்பலூர், அரிய லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் பால் விநி யோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.  இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், காலை 11 மணிக்கு ஒரு மாத தொகையை தருவதாகவும், மற்றொரு மாதத் தொகையை வியாழனன்று தருவதாகவும் அதிகாரி கள் தெரிவித்ததால் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மாலை முதல் வழக்கம் போல் பால் பாக்கெட்டுகளை எடுத்துச்  செல்வதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

காசோலை மோசடியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

தஞ்சாவூர், மே 29-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூணி அருகே காசோலை மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய  சிறையில் அடைக்கப்பட்டார்.  பேராவூரணி அருகே உள்ள வேம்பங்குடியைச் சேர்ந்தவர்  நடராஜன். இவரிடம் கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த  நாகராஜன் என்பவர் தனது தேவைக்காக வாங்கிய கட னுக்காக ரூ.20 லட்சத்து 75 ஆயிரத்துக்கு காசோலை வழங்கி யிருந்தார்.  அந்த காசோலையை நடராஜன் வங்கியில் செலுத்திய போது, போதிய பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது. இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பட்டுக் கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடராஜன் தொடர்ந்த வழக்கில், நாகராஜன் காசோலை மோசடி செய்ததற்காக ஒரு  ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20 லட்சத்து 75 ஆயி ரத்தை உடனடியாக செலுத்த தவறினால் மேலும் 4 மாதமும் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தண்டனையை எதிர்த்து நாகராஜன் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார். முதன்மை நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்டு, மீண்டும்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் நாகராஜன் மேல்முறையீடு செய்தார்.  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மார்ச் மாதம் கீழமை நீதிமன்றத் தண்டனையை உறுதி செய்தது. இதை யடுத்து பட்டுக்கோட்டை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர்  சத்யா, காசோலை மோசடியில் ஈடுபட்ட நாகராஜன் மீது பிடி வாரண்ட் பிறப்பித்தார்.  இதையடுத்து பேராவூரணி காவல்துறையினர் நாகரா ஜனை கைது செய்து, பட்டுக்கோட்டை விரைவு நீதிமன்றத் தில் நேர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பேராவூரணி வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - எழும்பூர் கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 28 வரை நீட்டிப்பு

ரயில் பயணிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி தஞ்சாவூர், மே 29- பேராவூரணி வழியாக இயக்கப்ப டும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் கோடைகால வாராந்திர சிறப்பு  ரயில் ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள், வர்த்தகர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர், மாண வர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று,  தெற்கு ரயில்வே நிர்வாகம் திரு நெல்வேலியில் இருந்து பட்டுக் கோட்டை வழியாக சென்னை எழும்பூ ருக்கு (வண்டி எண் 06070 /06069) தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங் களில் விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்கியது. தற்போது கோடைக் காலம் என்ப தால், பயணிகள் நெரிசலை தவிர்க்கும்  பொருட்டு, ஏப்ரல் மாதம் முதல் திரு நெல்வேலி- சென்னை எழும்பூர்-திரு நெல்வேலி கோடை கால வாராந்திர சிறப்பு ரயிலை பேராவூரணி வழியாக மீண்டும் இயக்கி வருகிறது. இந்த ரயில் சேவையை, தற்போது ஜூன் 28  ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு  ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அதன்படி இந்த ரயில், திருநெல் வேலியில் இருந்து எழும்பூர் நோக்கி, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறு வழித்தடத்தில் எழும்பூரிலிருந்து ஜூன் 7, 14, 21, 28  தேதிகளில் திருநெல்வேலிக்கு இயக் கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வா கம் அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து இந்த  ரயில் (வண்டி எண்: 06070) வியாழக்கிழ மைகளில் மாலை 6.45 மணிக்கு புறப் பட்டு, பேராவூரணிக்கு இரவு 11.28-க்கு  வந்து சென்னை எழும்பூரை வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு சென்ற டைகிறது. மறு வழித்தடத்தில் இந்த ரயில்  (வண்டி எண்:06069) சென்னை எழும் பூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு பேரா வூரணிக்கு இரவு 11.35 மணிக்கு வந்து, திருநெல்வேலிக்கு சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு சென்றடையும். இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் பகுதி யில் இருந்து எழும்பூருக்கும், தென்  மாவட்டங்களுக்கும் செல்ல பயனுள்ள தாக இருக்கிறது. எனவே இந்த ரயிலை தொடர்ந்து இயக்கி வரும் தெற்கு  ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் நன்றி தெரி வித்துள்ளனர்.

ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு பதில் அளிக்காத  வட்டாட்சியர் இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை, மே 29-  மதுரை மாவட்டம் சத்ய சாய் நகர் பகுதி யைச் சேர்ந்தவர் முன்னாள் போக்கு வரத்துத் துறை ஊழியர் என்.ஜி.மோகன். இவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நில  தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடந்த 2019-ஆம் ஆண்டு விண்ணப்பம் ஒன்று செய்துள்ளார். இந்த நிலையில், சுமார் 1,550 நாட்க ளைக் கடந்து வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பதில் அளிக்காததால் மேல்  முறையீடு செய்திருக்கிறார். மேல்முறை யீடு செய்தும் முறையாக பதில் அளிக்கா மல் இருந்ததால் சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு  தொடுத்துள்ளார்.  இதில், பதில் அளிக்காமல் அலைக் கழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் மணி மாறன் ரூ.10 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிடப்பட்டது, இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ரூ.10  ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை மோகனுக்கு தபால் மூலம் அனுப்பப்  பட்டுள்ளது. மேலும் மோகனுக்கு தேவை யான அனைத்து ஆவணங்களையும் சான் றொப்பம் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

டோல்கேட் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடுக!

சிஐடியு வலியுறுத்தல் விருதுநகர், மே 29- ஒன்றிய அரசானது, டோல்கேட் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டூரிஸ்ட்  வேன்களை நிறுத்திக் கொள்ள பொருத்த மான இடத்தை உள்ளாட்சி நிர்வாகம் ஒதுக்கித்தர வேண்டும் என சிஐடியு-சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுப் பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் டூரிஸ்ட் வேன் கார் டாட்டா  ஏசி மற்றும் கனரக வாகனங்களின் உரிமை யாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் விஜய் தலைமையில் நடை பெற்றது. பி.செல்வகுமார், எஸ்.ராஜா, எம்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். துவக்கி வைத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம். திருமலை பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.பால சுப்ரமணியன் விளக்கிப் பேசினார். சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன், முரளி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா சிறப்பு ரையாற்றினார். சங்கத்தின் தலைவராக ஆர்.விஜய், செயலாளராக எஸ்.செல்வக்குமார், பொரு ளாளராக எஸ்.ராஜா, துணைத் தலைவ ராக ஜெயபிரகாஷ், துணைச் செயலாள ராக செந்தில் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.

தாடிக்கொம்பு அழகர் கோவிலில் 500 ஆண்டுகள் பழமையான தீர்த்தக் கிணறு கண்டுபிடிப்பு

திண்டுக்கல், மே 29- திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் 500 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  விஜயநகர பேரரசு காலத்தில் கிருஷ்ணதேவராயர் வாரிசுகளான அச்சுத தேவராயர், ராமதேவராயர் ஆகியோர் இந்த கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் தற்போது தீர்த்தக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த  அக்னி தீர்த்த கிணறு கோவில் பயன் பாட்டுக்கு வந்துள்ளது.  தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெ றும் குடமுழுக்கு விழாவிற்கும் மற்றும் கோவில் விஷேசங்க ளுக்கும்,  தேவையான தீர்த்தத்தை தீர்த்த கிணற்றில் இருந்து  எடுத்துக் கொள்ளலாம். இது சம்பந்தமாக தீர்த்தம்  தேவைப்படுபவர்கள் கோவிலுக்கு நேரில் வந்து அர்ச்ச கர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்  என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரூ.1 லட்சம் லஞ்சமாகப் பெற்ற தாசில்தாருக்கு விசாரணையின் போது நெஞ்சுவலி

தேனி, மே 29- மதுரையை சேர்ந்த சுப்ரமணி என்பவர்,  ஆண்டிபட்டியை அடுத்துள்ள தேக்கம்பட்டி  என்ற கிராமத்தில் அவருக்கு சொந்தமான  இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான  வேலைகளை செய்து வந்தார்.  இந்நிலையில், பெட்ரோல் பங்க் வைப்ப தற்கு வருவாய்த்துறையின் தடையில்லா சான்று பெற வேண்டி சுப்பிரமணி ஆண்டிப்  பட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்பிடம் விண்ணப்பித்திருந்தார். தடையில்லா சான்று வழங்குவதற்கு தனக்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என சுப்பிரமணியிடம் தாசில்தார் கேட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்தார். இதனை அடுத்து சுப்பிர மணியிடம் ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்சம் ரொக்க பணத்தை கொடுத்து அனுப்பினர்.  வட்டாட்சியர் அலுவலகம் சென்ற சுப்பிரமணி ரசாயனம் தடவிய ரூ.ஒரு லட்சம்  பணத்தை தாசில்தாரிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்  புத்துறையினர் தாசில்தார் காதர் ஷெரிப்பை கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாசில் தார் அறைக்குள் சென்று விசாரித்தனர்.  விசாரணை நடந்து கொண்டிருந்த போது, தாசில்தார் காதர் ஷெரிப்பிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து தாசில்தார் காதர் ஷெரிப்பை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லஞ்ச புகார் குறித்து  தேனி லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.