districts

img

அடிக்கடி பழுதாகும் மின்மாற்றியை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

கொள்ளிடம், ஆக.30 - புதுப்பட்டினம் கடைத்தெருவில் உள்ள  மின்மாற்றி அடிக்கடி பழுதாகிறது. இதனை  அகற்ற வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்  அருகே தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து பழையாறு மீன்பிடி துறைமுகம் செல்லும் நெடுஞ்சாலையில் புதுப்பட்டினம் கடை வீதியில் மின்மாற்றி அமைந்துள்ளது.  இந்த மின்மாற்றியிலிருந்து அப்பகுதி யில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றி அமைக் கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், அடிக்கடி மின்மாற்றியிலிருந்து தீப்பொறி வருகிறது. மேலும், பலத்த காற்று  மற்றும் மழைக்காலங்களில் மின் இணைப்பு  தானாகவே துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள  னர். இந்த மின்மாற்றி மக்கள் அதிக எண்ணிக் கையில் கூடும் முக்கிய இடத்தில் உள்ளது.  மேலும், மின்மாற்றி தரைப் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளதால் உரிய பாதுகாப் பின்றி உள்ளது. எனவே இதைச் சுற்றி கான் கிரீட் சுவர் அமைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுப்பட்டி னம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.