districts

img

பயன்பாட்டிற்கு வராத மின்மாற்றியும் பழுதடைந்த மின் கம்பங்களும்

பாபநாசம், ஜூலை 21 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பேட்டை அருகே உள்ளிக்கடை சுதர்மன் தெரு முடிவில், காடுவெட்டி நிலங்கள் பயன் பெறும் வகையில் மின்மாற்றி அமைக்கப் பட்டது.  இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு 2  ஆண்டுகளை கடந்தும், இணைப்பு வழங்கப்படாததால், பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதை பயன்பாட்டி ற்கு கொண்டு வர அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத னால் 100 ஏக்கர் நிலங்கள் பயன்பெ றும் என்கின்றனர்.  இதேபோன்று உள்ளிக் கடையி லிருந்து வழுத்தூர், அய்யம்பேட்டை செல்லும் சாலையில் உள்ள இரண்டு மின் கம்பங்களில் சிமெண்ட் காரைப் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் தெரி கின்றன. இந்த மின் கம்பங்கள் எந்நேரத் திலும் கீழே விழும் நிலையில் உள்ளன.  இவற்றை அகற்றக் கோரி, ஒன்றரை வருடமாக மின் வாரியத்திற்கு கோரிக்கை  வைத்தும் மின் கம்பங்கள் மாற்றப்படா மல் உள்ளன.  ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள பாப நாசம் யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள  சாலை குண்டும், குழியுமாக கிடந்து  வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. இந்தச் சாலையை புதிதாக தர மாகப் போட வேண்டும். பெருமாள் கோயிலில் உள்ள காதர் மைதீனின் போர் செட்டிற்கு 2 ஆண்டாக இணைப்பு  வழங்கப் படாமல் உள்ளது. இதற்கு மின்கம்பி இல்லை இல்லாததுதான் காரணம் என்கின்றனர்.  மின் வாரியம் மேற்கண்ட கோரிக் கைகளில் உரிய கவனம் செலுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.